திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி சுமார் 96,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வாங்கி வளர்மதி சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் இன்ஜினீயர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 25 சுயேச்சைகளுடன், களத்தில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதிக்கு கடந்த 13ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார். மொத்தம் 23 சுற்றுகள் எண்ணப்பட்டன.
23 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் 1,51,561 வாக்குகள் பெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் 55,044 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை விட சுமார் 96,517 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2011ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மொத்தம் 1,05,300 வாக்குகள் பெற்றதோடு, 41,848 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.
தற்போது, அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி 96,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் இந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை. அந்த வகையிலும் வளர்மதி சாதனை படைத்துள்ளார்.
2 ஸ்ரீரங்கம், போயஸ் கார்டனில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்! (படங்கள்)
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றத்தை தொடர்ந்து அக்கட்சியினர் ஸ்ரீரங்கத்திலும், சென்னை போயஸ் கார்டனிலும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் இன்ஜினீயர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 25 சுயேச்சைகளுடன், களத்தில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே அ.தி.மு.க. முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி ஶ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பும், வாக்கு எண்ணும் மையத்தின் முன்பும் அ.தி.மு.க தொண்டர்கள் வெடிவெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக குதூகலமாக உள்ளனர். வெற்றிக்கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் அ.தி.மு.க.வினர் வலம் வருகின்றார்கள்.
இதனிடையே ஜெயலலிதா இருக்கும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.