மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கு நியமனம் வழங்கப்பட்ட 63 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டு மீள அழைத்துள்ளது.
மீள அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் அடங்குகின்றனர்.
அத்துடன் முன்னாள் அரசியல்வாதிகள், முன்னாள் படை அதிகாரிகள் போன்றோரும் திருப்பி அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனர்.
திருப்பி அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளது.