எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி நைஜீரியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த தாம் இடமளிக்க போவதில்லை என பொஹோ ஹராம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்ததுள்ளனர்.

பொஹா ஹராம் தீவிரவாத குழுவின் தலைவர் அபூபக்கர் சேகுத் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோ, செவ்வாய்க்கிழமை(17) சமூக ஊடகங்களில் வெளியானதாக அமெரிக்காவை தளமாக கொண்ட புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அமைதியற்ற சூழலை தாம் ஏற்படுத்த போவதாக அந்நாட்டு ஜனாதிபதி குட்லக் ஜொனாதனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்டவாறு நடத்த முற்பட்டால் அதன்காரணமாக அசம்பாவிதங்களே ஏற்படும் என்றும் நாட்டில் அமைதி நிலவ தாம் விடமாட்டோம் என்றும் அந்த அமைப்பு அச்சுறுத்தியுள்ளது.

‘நம்புவதற்கு மறுக்கும் தலைவர்களுக்கு ஓர் செய்தி’ எனும் தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நாங்கள் எப்படி போரிடுவோம் என எங்களுக்கே தெரியாது, எமது படையினர் உங்கள் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு சிறையிலிருக்கும் எமது சகோதரர்களை விடுவிப்பார்கள் என இந்த வீடியோவில், பொஹோ ஹராம் தீவிரவாத குழுவின் தலைவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அல் ஜஷீரா செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply