காலத்தை கிறிஸ்­து­வுக்கு முன், கிறிஸ்­து­வுக்கு பின் என்று பிரிப்­பது வர­லாறு. அது­போல வாழ்க்­கையை ஏழ­ரைச்­ச­னிக்கு முன், ஏழ­ரைச்­ச­னிக்கு பின் பிரிப்­பது சோதிடம்.

தான் பிடித்த ஒரு­வரை ஏழ­ரை­யாண்டு காலம் துன்­பத்தில் உழல வைத்து, எல்­லா­வற்­றிலும் பட்­டுத்­தேறி பதப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு­வ­ராக ஆக்­கி­விடும் வல்­லமை இந்தச் சனிக்கு உண்டு. ஏழ­ரைச்­ச­னியின் காலத்தை கடந்­து­விட்ட ஒரு­வ­ருக்கு வாழ்வில் ஏற்­படும் தெளிவும் நிதா­னமும் ஆச்­ச­ரி­ய­மா­னது.

பட்­டுத்­தே­றிய முதிர்ந்த வார்த்­தை­களால் அனு­பவ பூர்­வ­மாகப் பேசவும், கற்­றுக்­கொண்ட பாடங்­களை கொண்டு நிதா­ன­மாக அடி­யெ­டுத்து வைத்து வாழவும் வைக்­கி­றது அது.

உங்கள் சாத­கத்தை எடுத்து கொண்டால் அதில் பன்­னிரு கட்­டங்கள் இருப்­பதை காண்­பீர்கள். அக்­கட்­டங்­களில்  நவக்­கி­ர­கங்­களில் ஒன்­றான சந்­திரன் இருக்கும் கட்­டம்தான் நீங்கள் பிறந்த ராசி­யாக கணிக்­கப்­படும்.

பிறந்த ராசி­யென்­பது வேறு, பிறந்த இலக்­கிணம் என்­பது வேறு. இலக்­கி­னத்தை உயி­ரெனக் கொண்டால் ராசியை உட­லெனக் கொள்­வது சோதிடம்.

நாம் பிறந்த ராசி­யிலும், அந்த ராசிக்கு முன்னும் பின்­னு­முள்ள ராசி­க­ளிலும்   சனி­சஞ்­ச­ரிக்கும் காலத்­தையே “ஏழ­ரைச்­சனி” என்பர்.

சிறு­வ­யதில் வரும் முதல் சுற்றை மங்­கு­ச­னி­யென்றும், வாலிப மற்றும்  மத்­திம வயதில் வரும் இரண்டாம் சுற்றை  பொங்குச­னி­யென்றும், நடு­வ­யது கடந்து வய­தா­கி­விட்ட காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்­கு­சனி அல்­லது மரணசனியென்றும் அழைப்பர்.

(இவ்­வாண்டில் தனு ராசிக்­கா­ரர்­க­ளுக்கு ஏழ­ரைச்­சனி முதல் கூறும், விருச்­சிக ராசிக்­கா­ரர்­க­ளுக்கு ஏழ­ரைச்­சனி நடுக்­கூறும், துலா­ரா­சிக்­கா­ரர்­க­ளுக்கு கடை­சிக்­கூறும் நடக்­கி­றது)

ஒரு­வரின் சாதக நிலைப்­படி பிறந்­த­தி­லி­ருந்து 19 வய­துக்குள்(Teenage) ஏழ­ரை­சனி வந்தால் அதன் தாக்­கத்தை மிகத் தெளி­வாக உண­ரலாம்.

இதில் சனியின் முழுத்­தி­ற­மையும் வெளிப்­படும். இவ்­விதம் அமைந்த பையனோ, பெண்ணோ யார் பேச்­சையும் கேட்­காமல் தான்­தோன்­றித்­த­ன­மாக நடப்பர். யாரா­வது கேட்டுக் கண்­டித்தால் பெரி­தாகக் கத்தி ஆர்ப்­பாட்டம் பண்­ணு­வார்கள்.

கூடித்­தி­ரி­கிற அல்­லது வகுப்­புக்­களில் கூடிப்­ப­டிக்­கின்ற பிள்­ளை­க­ளை­யும இவர்கள் தான் கெடுக்­கி­றார்கள் என்ற மாதிரி புகார்கள் வரும். வீட்டில் எதற்­கெ­டுத்­தாலும் சண்­டைக்கு முன் நிற்பர்.

தனது போக்குக்கு இசை­யாத பெற்­றோரை படி­ய­வைப்­ப­தற்­காக பட்­டினி கிடத்தல், உடை­களை கிழித்தல், உடம்பில் காயங்­களை ஏற்­ப­டுத்­துதல் போன்ற சுய தண்­ட­னை­களும் நடக்கும்.

சொறி சிரங்கு காலில் புண்கள், முறிவு போன்ற சனிக்­கே­யு­ரித்­தான வியா­தி­களும் விபத்­துக்­களும் ஏற்­பட்டு சிகிச்சை செய்தும் குண­மா­காது வருத்தும்.

இத­னை­விட பெற்­றோ­ருக்­குள்ளும் இப்­பிள்­ளையை முன்­னிட்டு சண்டை சச்­ச­ர­வுகள், பிரி­வுகள் வரும். அதுவும் மூன்றாம் நப­ரொ­ரு­வரின் தலை­யீட்டால் வரும்.

அவரும் இந்த ஏழரை சனிக்­கா­லத்தில் அறி­மு­க­மாகி குடும்­பத்­துக்கு நெருக்­க­மாகி போன ஒரு­வ­ரா­யி­ருப்பார்.

அதனால் தேன் கூட்டில் கல்­லெ­றிந்து கலைத்­தது போல் ஆகி­விடும் குடும்பம். இந்த கால­கட்­டத்தில் தான் பிள்­ளைகள் கூடா­நட்பில் சிக்கி அலை­வார்கள்.

மது, போதை, ஆபா­சப்­படம் என்று ஒரு மாயா லோகத்தில் சஞ்­ச­ரிப்­பார்கள். இப்­ப­டி­யான சம­யத்தில் கண்­கொத்திப் பாம்­பா­யி­ருந்து கவ­னித்தால் ஒரு­வாறு அவர்­களை மீட்க முடியும்.

தனது சஞ்­சார காலத்தில் ஏட்­ட­றிவு, எழுத்­த­றிவு, சொல்­ல­றிவு தாண்­டிய அனு­பவ அறிவை ஏற்றி வைப்­ப­துதான் ஏழரைச்சனியின் வேலை. தட்டிக் கொடுத்தும் கேட்­காத பிள்­ளையை தடி­யெ­டுத்துத் தண்­டித்துத் திருத்தும் வாத்­தி­யார்தான் சனி­ப­கவான்.

ஏழ­ரைச்­ச­னியில் பெறும் அவ­மா­னங்­களும் காயங்­களும் வடுக்­களும் வாழ்க்கை முழு­வதும் மறக்­க­மு­டி­யாத அனு­ப­வங்­க­ளா­யி­ருக்கும்.

“இன்னும் இரண்டு மார்க் அதி­க­மாக எடுத்­தி­ருந்தால் மருத்­து­வப்படிப்­புக்கு போயி­ருக்­கலாம். ஊர்­சுற்­றித்­தி­ரிந்த நேரம் இன்னும் கொஞ்சம் பொறுப்பாப் படிச்­சி­ருக்­க­லாமே? எல்லாம் என் தலை­விதி” என்று ஏ.எல். பரீட்சை முடி­வுகள் வெளி­யான பிறகு புலம்ப வைப்பார். இப்­படி வருத்­தப்­பட வைத்தே வாழ்க்­கையை வளர்ப்பார் சனி.

அடுத்­த­தாக இரண்­டா­வது சுற்று. 25 வய­துக்கு மேல் யாருக்கு ஏழ­ரைச்­சனி நடந்­தாலும் அதற்குப் பெயர் பொங்­கு­சனி என்ப­தாகும். பறித்­தாலும் பாது­காத்­தாலும் பல மடங்கு பெருக்கி தரு­த­லுமே இந்த இரண்­டா­வது சுற்றின் பலன்.

உள்­ளுக்குள் அமுக்­கிக்­கி­டந்த ஆற்­றல்­க­ளை­யெல்லாம் வெளி­கொ­ணர்ந்து செயற்­பட வைப்பார். அவற்றின் மூலம் செல்­வத்தை அள்ளிக் கொடுப்பார். இத­னூடே கொஞ்சம் கெடுத்தும் விடுவார்.

அதனால் கொடுத்துக் கெடுப்­பவர் கெடுத்தும் கொடுப்­பவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. “ ஒண்­டுக்­குமே வழி­யில்­லாத ஓட்­டாண்­டியா இந்த ஊருக்கு வந்தான்.

இப்போ வீடு­வாசல், வெள்ளாமை தோட்டம் துரவு, ஆடு மாடு என்று வச­தியா இருக்­கிறான். ஊர்­லயும் அதி­கம்பேர் அவ­னிட்­டதான் வேலை செய்­றா­னுகள்” என்று ஒரு­வரை குறிப்­பிட்டு வியந்து பேசு­வோமே?

அவரை இந்த ஏழ­ரைச்­ச­னியின் இரண்­டா­வது சுற்­றுத்தான் உரு­வாக்கும். காசு, பணம், துட்டு, பதவி, கல்­யாணம், சொத்து , சுகம் எல்­லா­வற்­றையும் கொடுப்பார் சனி. ஆனால் இடை­யி­டையே அவை­க­ளி­லி­ருந்து கொஞ்சம் கப­ளீ­கரம் செய்தும் திண்­டாட வைத்­து­வி­டுவார்.

இந்த இரண்­டா­வது சுற்று நடக்­கி­ற­போது மித­மிஞ்­சிய செல்­வத்­தாலும் செல்­வாக்­காலும் சிலர் பிரச்­சி­னை­களை உரு­வாக்குவார்கள். ஆகவே, இரண்­டா­வது சுற்றில் மலை­போல செல்வம் வந்­தாலும் கவ­ன­மாக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும்.

ஏழ­ரைச்­ச­னி­யாக சனி­ப­கவான் நமக்குள் வந்­தால்தான் நமது அறி­வுக்கும் சக்­திக்கும் அப்­பாற்­பட்ட விட­யங்கள் இருக்­கின்­றன என்­பதை உணர்வோம். அப்­போ­துதான் நம்­கையில் எது­வு­மில்லை என்ற சரணா­கதி தத்­து­வமும் புரியும்.

ஏழ­ரைச்­சனி நடக்­கிற கால­கட்­டத்தில் முக்­கி­ய­மாக கோர்ட் , கேஸ் என்று போகக்­கூ­டாது. கடன்­கா­ர­னி­ட­மி­ருந்து ஒரு இலட்ச ரூபாவை வசூ­ழிக்க நீதி­மன்றம் போனால், பின்னர் அதற்­காக பத்து இலட்சம் ரூபா வரை செலவு செய்ய நேரிடும். பொலிஸ்­கா­ரர்­க­ளுக்கும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் தான் உங்­களால் ஆதாயம்!

வச­திகள் வரும்­போது “நான்” என்ற அகந்­தையை தலையில் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டாது. மாளி­கையில் வாழக்­கி­டைத்­தாலும் குடி­சையில் வாழும் மனோ­நி­லை­யுடன் இருங்கள்.

எல்­லா­வற்­றிற்கும் ஆசைப்­பட்டு அடுத்­த­வர்­க­ளு­டை­ய­தையும் வாரிச்­சு­ருட்­டும்­போது, அதை­பார்த்துக் கொண்டு சனி­ப­கவான் சும்­மா­யி­ருக்­க­மாட்டார்.

அர்ப்­ப­ணிப்­போடு அமை­தி­யாக ஒரு நிறு­வ­னத்தில் உழைத்துக் கொண்­டி­ருந்த ஒருவர், தமது ஏழ­ரைச்­சனிக் காலத்தில் அந்த நிறு­வ­னத்­தையே சொந்­த­மாக்கிக் கொண்­ட­தையும் நான் பார்த்­தி­ருக்­கிறேன்.

இந்த இரண்­டா­வது சுற்றில் வியா­பாரம் விருத்­தி­யாக உத்­த­ர­வா­த­முண்டு. ஆகவே, இதர கோசார கிரக நிலை­க­ளையும் அவ­தா­னித்து தொழில் தொடங்­கலாம். அல்­லது உள்­ளதை அபி­வி­ருத்தி செய்­யலாம்!

குறுக்கு வழிகள் வந்­தாலும் பாதை மாறக்­கூ­டாது. மாறினால் இனி அத­ல­பா­தா­ளந்தான். பிர­தி­பலன் கரு­தாது செய்யும் உத­வி­க­ளுக்கும் தான­தர்­மங்­க­ளுக்கும் பொங்கு சனி நல்ல பலன் கொடுக்கும்.

ஏறத்­தாழ 50 வயதை தாண்­டி­வரும் ஏழ­ரைச்­ச­னியின் மூன்­றா­வது சுற்­றுதான் உங்கள் வாழ்வின் இறு­தி­காலம் என்று யாரா­வது சொன்னால் அதற்­காக அஞ்­சா­தீர்கள். ஜோதி­டத்தில் சனி ஆயுட்­கா­ர­க­னா­கவும், மர­ண­கா­ர­க­னா­கவும் இருப்­ப­தால்தான் அப்­படிக் கூறு­கி­றார்கள்.

உங்கள் ஜாத­கத்தில் சனி­யா­னவர் ஏற்­க­னவே ஆட்சி, உச்சம், கேந்­திரம், கோணம் போன்ற ஏதா­வ­தொரு வலு­வான நிலையில் அமர்ந்து சுபக்­கி­ரக பார்­வையோ, அன்றி சேர்க்­கையோ பெற்­றி­ருந்தால் உங்­க­ளுக்கு தீர்­கா­யுள்தான். அதில் சந்­தே­க­மில்லை.

அப்­ப­டி­யின்றி துர்ஸ்­தா­னங்­களில் சனி அமர்ந்து நீசம், பகை போன்ற நிலை­களில் அசு­பர்­களின் சேர்க்கை அல்­லது பார்வை பெற்­றி­ருந்தால், அதுவே முது­மையில் விரும்­பத்­த­காத விளை­வு­களை ஏற்படுத்தும்.

விபத்து அல்­லது பாரி­ச­வாதம் வந்து கைகால்­களை முடக்கி படுக்­கையில் வீழ்த்­துதல், மனைவி மக்­க­ளுடன் முரண்­பட்டு மனங்­க­சந்து வீட்­டி­னுள்­ளேயே தனி­மைப்­ப­டுதல் அல்­லது வீட்டை விட்டு வெளியேறி ஊருக்கு ஊர் பர­தே­சியாய் அலைதல், போர், கல­வரம் போன்ற உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களில் சிக்கி எல்­லா­மி­ழந்து சித்தம் கலங்கி தனி­மைப்­ப­டுதல், பிற­நா­டு­களில் சென்று ஆத­ர­வற்று தனியே வாழ்தல் போன்ற விளை­வுகள் சனி தீமையாய் அமைந்த சாத­கர்­க­ளுக்கு முது­மையில் ஏழ­ரை­ச­னியும் நடக்­கிற காலத்தில் ஏற்­படும்.

வய­தான காலத்தில் நெஞ்சில் பயத்­தையும் படப்­ப­டப்­பையும் தரும் சுற்று ஏழ­ரைச்­ச­னியின் கடைக்­கூறு. வழக்­கத்­தை­விட அன்­றாட நட­வடிக்கை­களில் ஒரு நிதானமும், உணவு, பானவிடயங்களில் ஒரு கட்டுப்பாடும் ஏற்பட்டு விட்டால், நீங்களும் இளைஞர்களுக்கு நிகராக சனிபயமின்றி வாழலாம்.

அதை விட்டு மாபெரும் சபைகளில் நான் நடந்தால் முன்போல் மாலைகள் விழவேண்டுமென்று இக்கால கட்டத்தில் எதிர்பார்க்கக்கூடாது. எங்கேயும் எப்போதும் தன்னைத் தாழ்த்தி சேவைகள், பணிவிடைகள் செய்ய முந்திக் கொண்டு மற்றவர்கள் மனங்களில் உயரப்பழகிக் கொள்ளுங்கள்.

எந்த விட­யத்­திலும் குற்றம் கண்­டு­ப­டித்தும் கொண்­டி­ருக்­கவும் சிடு­சி­டுத்துக் கொண்­டி­ருக்­கவும் கூடாது. முக்­கி­ய­மாகத் தனது வீட்டில் முன்போல் எதிலும் முதல் மரி­யா­தையை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்க வேண்டாம்.

“நானெல்லாம் முன்பு எவ்­வ­ளவு பெரிய பத­வியில் இருந்­தவன், அல்­லது முன்பு எவ்­வ­ளவு பெரிய பணக்­கா­ர­னாக வாழ்ந்­தவன்” என்ற இறு­மாப்­பெல்லாம் இந்த ஏழரை கடைக்­கூற்றில் உங்­க­ளுக்கு வரக்­கூ­டாது.

ஏழ­ரைச்­ச­னியின் போது உங்கள் மனச்­சாட்­சிக்குப் பயப்­ப­டுங்கள். மனச்­சாட்­சியை மீறி எது செய்­தாலும் சனியின் பாதிப்­புக்கு ஆளா­வீர்கள்.

உங்­க­ளது மனச்­சாட்­சியும் சனி­ப­க­வானும் வேறு­வே­றல்ல என்­பதை உங்கள் ஏழ­ரைச்­ச­னியின் காலத்­தின்­போது நீங்கள் பெற்ற அனுபவங்களே உங்களுக்கு எடுத்துக்கூறும்

Share.
Leave A Reply