சென்னை: திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றே ‘முருகன் தனிநாடு கேட்ட போராளி’ என்பதற்கு ஆதாரம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இயக்குநராக இருந்த சீமான் திராவிடர் இயக்க மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளையும் ஈழ விடுதலை ஆதரவு கருத்துகளையும் பேசிவந்தார்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ‘திராவிட’ எதிர்ப்பு அரசியலை முன்வைத்து ‘நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கினார்.

பின்னர் இதனை ‘நாம் தமிழர்’ அரசியல் கட்சியாக மாற்றினார். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்பட்டு. அய்யநாதன் தலைமையில் ஒருபிரிவினர் ‘நாம் தமிழர்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பழனியில் பச்சை வேட்டி, துண்டு அணிந்து வேல் ஏந்தி, மனைவியுடன் காவடி எடுத்த சீமான், வீரத் தமிழர் முன்னணி” என்ற பண்பாட்டு மீட்பு அமைப்பைத் தொடங்கினார்.
அதன் தொடக்க விழாவில் பேசிய சீமான், கடவுள் முருகன் எங்களது முப்பாட்டன்.. முப்பாட்டனை நாங்கள் வழிபடுகிறோம் என்றார்.
இது கடுமையான விமர்சங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்நிலையில் சிகப்புநாடா என்ற ஏட்டில் சீமான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

கேள்வி: முருகன் போராளின்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் வைச்சிருக்கீங்க? பதில்: நீங்க திருவிளையாடல் படம் பாக்கலையா..

ஒரு மாங்கனிக்காக சூது பண்ணி பிள்ளையார் கவுத்த உடனே, ‘எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று ஒரு கொடி, என்நாடு, என் மக்கள்னு’ சொல்லிட்டு முருகன் தனியா கிளம்பி வந்துரல…? என்ன தம்பி பேசறீங்க..

இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும் சொல்லுங்க

கேள்வி: சரிங்க,, முருகனை தமிழ்க்கடவுள்னு ஒத்துக்கிட்டீங்க..

அவரோட அண்ணன் பிள்ளையார், அப்பா சிவன் எல்லோரையும் ஏத்துக்கனுமே

பதில்: ஆங்.. அங்கதான் இருக்கு ஆரிய சூழ்ச்சி. அவங்க அப்பா சிவன்கூட தமிழன்தான்..

தமிழ்ச்சங்கத்தோட தலைவனாக இருந்தவன் தான்.. ஆனா அந்த பிள்ளையார்தான் ஆரியர்கள் புகுத்திய இடைச்செருகல்…

நாங்க தெளிவா இருக்கோம்ல… எங்களை யாரும் ஏமாத்த முடியாதுல்ல..

இப்படியான ‘கலகலப்பாக’ நீள்கிறது சீமானின் பேட்டி

10-1423543892-seeman235

சரி அண்ணா. ...முருகன் தனிநாடு  கேட்டவன் என்று வைத்துக்கொள்வோம். ஆனால்… அவன்  இந்தியாவுக்குள் தானே “தனிநாடு”  கேட்டவன்.

எங்கட   தமிழீழத்தை பற்றி   எந்தக்காலத்திலாவது   முருகன்  பேசியிருக்கின்றானா?   முதலில் … முருகன்  தமிழில்     எப்பொழுதாவது  பேசியிருக்கிறானா?

முருகனுக்கு  தமிழ்  புரியாது  என்றபடியால்தானே..   முருகன்  கோயில்களில்   சமஷ்கிருத மொழியில்  பூசை செய்கின்றார்கள்.

சீமான்  ஏன்  “தமிழீழம்”   வேண்டும் என்று  கேட்கின்றான்?  தமிழகத்தை   தனிநாடாக  உருவாக்குவதற்காக  போராடவேண்டியது தானே?

இன்றைக்கு…  5000 ஆண்டுகளுக்கு முன்பு…  இலங்காபுரியை   தமிழ்  மன்னனான   இராவணன்  ஆட்சி  செய்தான்.

அந்த ஆட்சியை  கவிழ்து, சின்னாபின்னமாக்கியது  யார்?

இலங்கா புரியை  அழிக்க,  ஆரியர்  படையினருடன்    (இராமன் படை) சேர்ந்து   வானரர் படையான  (சீமானின் படையணி)  சதி  செய்ததை   ஈழத்  தமிழன்   இன்னும்   மறக்கவில்லை  என்பதை சீமானுக்கு அறியத்தருகின்றோம்.

“வானரர் படை”  (சீமானின் படையணி)  வேண்டுமானால்  கறுத்த  கொடியை  தூக்கிக்  கொண்டு  ஆாப்பரிக்கலாமே தவிர,   வேறொன்றும் செய்யமுடியாது.

முடிந்தால்  வேலாயுதத்தை   எறிந்துவிட்டு   துப்பாக்கி  தூக்கி  இந்திய அரசுக்கு  எதிராக போராடுங்கள்  பார்ப்போம்.

Share.
Leave A Reply