மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் பாரிய திருக்கை மீன் ஒன்று இன்று காலை பிடிபட்டுள்ளது.
முகத்துவாரம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையிலேயே இந்த பாரிய மீன் சிக்கியுள்ளது.
சுமார் 1000 கிலோ எடையுடைய இந்த மீன் கொம்பு திருக்கை இனத்தினை சேர்ந்தது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மீனை சுமார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யமுடியும் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர்.