தோஹா: உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது.
- திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது.
- வேலையில் சேர்ந்த பின் 5 வருடங்களுக்கு தனி நபராகவே இருக்கவேண்டும்.
- திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிறுவனத்தின் அனுமதியை பெறவேண்டும்.
- கர்ப்பம் அடைவது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.
அப்படி மீறினால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.
பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் முதற்கட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகி 18 மாதங்கள் ஆன பின்பும் பெண்களுக்கு எதிரான தனது விதிமுறையை கத்தார் ஏர்வேஸ் மாற்றிக்கொள்ளவில்லை.
இதையடுத்து அந்நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பார்சிலோனா கால்பந்து சங்கத்தை சம்மேளம் கேட்டுக்கொண்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
எனினும் இக்குற்றச்சாட்டை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரோசன் டிமிட்ரோவ் கூறுகையில், பணிப்பெண்கள் தனியாக இருக்கவேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை, மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் பல பணிப்பெண்கள் திருமணமானவர்கள் என்றார்.
பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் போன்ற காரணங்களுக்காகவே கர்ப்பம் அடைந்தது குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பேகர் கூறுகையில், நிறுவனத்தின் விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வேலை கேட்டு வரும்போது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை வழங்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
அதன் பின்னர் எப்படி விதிமுறைகளுக்கு எதிராக புகார் அளிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி கிடந்த கப்பலில் தங்க புதையல்
20-02-2014
இஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது. இதன் அருகே 1000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிகிடந்த கப்பல் ஒன்றை புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த கப்பலுக்குள் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன.
இதுவரை 9 கிலோ தங்க நாணயத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும் ஏராளமான நாணயங்கள் இருக்கலாம் என கருதி தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
அரபுநாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிவித் கலிபக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு கப்பலில் இந்த தங்க நாணயம் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்போது கப்பல் கடலில் மூழ்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கப்பலை புதைபொருட்களை தேடும் குழு ஒன்று கண்டுபிடித்தது. ஆனால் அதில் உள்ள தங்கம் அனைத்தும் அரசுக்குதான் சொந்தம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் புதைபொருளை கண்டுபிடித்த குழுவுக்கு எந்த பலனும் இல்லாமல் போனது.