நெல்லை: இலங்கை அக­தி­களின் குடும்பம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறில் அக்­காவை தம்பி அரி­வா­ளினால் வெட்டி காயப்­ப­டுத்­தி­யுள்ள சம்­பவம் கங்­கை­கொண்டான் கலைஞர், கால­னியில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

நெல்­லையை அடுத்த கங்­கை­கொண்டான் கலைஞர் கொல­னியில் இலங்கை அகதி முகாம் உள்­ளது. இங்கு மயூரன் (வயது28) என்­பவர் தனது சகோ­தரி மலர்(வயது37) என்­ப­வ­ருடன் வசித்த வரு­கிறார்.

மலர் தனது கணவர் நவ­ரா­ஜினை பிரிந்து தனது குழந்­தை­யுடன் வசிக்­கிறார். நவராஜ் வேறொரு அகதி முகாமில் தனி­யாக வசித்து வரு­கிறார். இந் நிலையில் சம்­ப­வத்­தன்று தனது குழந்­தையை பார்க்க நவராஜ் வந்­துள்ளார்.

இந்த தகவல் மயூ­ர­னுக்கு தெரிய வந்­துள்­ளது. அவர் தனது சகோ­த­ரி­யிடம் ‘உன்னை வேண்டாம் என்று கூறிய கண­வ­ரிடம் ஏன் குழந்­தையை பார்க்­க­விட்டாய்’, என­ இது தொடர்பில் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டுள் ளார்.

வாக்­கு­வாதம் முற்­றி­யதில் ஆத்­திரம் அடைந்த மயூரன் அரி­வாளால் மலரை வெட்­டி­யுள்ளார். இதில் அவ­ரது கை விரல் துண்டா­கியது. காயம் அடைந்த மலர் சிகிச்­சைக்­காக பாளை அரச மருத்­துவ மனையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இது­பற்றி கங்­கை­கொண்டான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து. வழக்கு பதிவு செய்த பொலிஸார் மயூரனை கைது செய்துள்ளனர்.

அதிக ‘லைக்­கு­களை’ பெற நினைத்த இளைஞன் கைது

showImageInStoryஹைத­ராபாத் உயி­ரியல் பூங்­காவில் இருந்த ஆமையின் மீது ஏறி நின்­ற­வாறு எடுத்த தனது புகைப்­ப­டங்­களை பேஸ்­புக்கில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள் ளார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஹைத­ரா­பாத்தைச் சேர்ந்த பசல் ஷேக் என்ற இளைஞர் கடந்த ஆண்டு மே மாதம் நேரு உயி­ரியல் பூங்­கா­வுக்கு சென்­ற­போது, விலங்­கு­களைப் பாது­காக்க வைக்­கப்­பட்­டி­ருந்த தடுப்­புகள் மீது தாவி குதித்து பின்னர் அங்­கி­ருந்த ஓர் ஆமை மீது ஏறி நின்றவாறு புகைப்­படம் எடுத்து பேஸ்புக் பக்­கத்தில் பகிர்ந்­து­கொண்­டுள்ளார்.

இந்தப் புகைப்­ப­டத்தை கண்ட உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்று பேஸ்­புக்கில் வெளி­யான வியப்­பான பகிர்வு என்று தலைப்­பிட்டு, பசல் ஷேக்கின் படத்தை வெளி­யிட்­டுள்­ளது.

அந்தப் பத்­தி­ரி­கையில் வெளி­யா­கி­யுள்ள படத்தைப் பார்த்த வனத்­துறை அதி­கா­ரிகள், பசல் ஷேக்கின் மீது முறைப்­பாடு செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து பேஸ்புக் பக்­கத்தை ஆய்வு செய்த பொலிஸார் கடந்த புதன்­கி­ழமை இரவு அவரை கைது செய்துள்ளனர்.

விசா­ரணையின் போது விளை­யாட்டு நோக்­கத்­தோடு புகைப்­படம் எடுத்து பேஸ்­புக்கில் லைக்­கு­க­ளுக்­காக பகி­ரவே அப்­படி செய்­த­தாக பசல் கூறி­யுள்ளார்.

பசல் ஷேக் மீது தடை செய்­யப்­பட்ட பகு­ திக்குள் அத்துமீறி நுழைந்து மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply