கிட்­டத்­தட்ட ஆறு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக, நாட்டின் ஜனா­தி­பதி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அர­சி­ய­லுக்கு இழுத்து வரும் முயற்­சிகள் முக்­கிய கட்­டத்தை அடைந்­துள்­ள­தா­கவே தெரி­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை (18ஆம் திகதி) நுகே­கொ­டையில் நடந்த பிர­மாண்­ட­மான கூட்டம், மஹிந்த ராஜ­பக் ஷவை மீண்டும் அரசி­ய­லுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக நடத்­தப்­பட்ட நாட­கத்தின் முதற்­காட்­சி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

நுகே­கொடைக் கூட்­டத்தில் திரண்ட பெரு­ம­ளவு மக்கள், மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்­கின்ற செல்­வாக்கை மீண்டும் உறுதிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக, அவ­ருக்கு ஆத­ர­வான கட்­சிகள் மற்றும் தலை­வர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியை இழந்த போதிலும், அவர் தனது செல்­வாக்கை சிங்­கள மக்கள் மத்­தியில் இழந்திருக்கவில்லை. ஆறு வாரங்­க­ளுக்கு முன்னர் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் 57 இலட்சம் வாக்­கு­களைப் பெற்றிருந்தார்.

சுமார் நான்­கரை இலட்சம் வாக்­குகள் குறை­வாகப் பெற்­றதால் தான் அவர் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்­டது.

எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் செல்­வாக்கை, மீண்டும் நிரூ­பிக்க வேண்­டிய தேவை இப்­போது எழுந்­தி­ருக்­க­வில்லை.

சுமார் 10 ஆயிரம் வரை­யான மக்­களைக் கூட்­டி­யதன் மூலம் மட்டும், அவர் செல்­வாக்கை இழந்து விட­வில்லை என்று காண்பிக்­கவும் தேவை­யில்லை. எனவே இந்தக் கூட்­டத்தை, பலத்தை நிரூ­பிக்கும் கூட்­ட­மாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

TodaysNugegoda_5

தான் வடக்கு கிழக்கு மக்­களால் தான் தோற்­க­டிக்­கப்­பட்டேன் என்­பதை மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் மீண்டும் கூறி வரு­கிறார். அவ்­வப்­போது அவர் தான் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை என்றும், அது ஒரு சூழ்ச்சி என்றும் கூடக் குறிப்­பி­டு­கிறார்.

அதா­வது, வடக்கு கிழக்கு மக்கள் ஒன்­றி­ணைந்து தன்னைத் தோற்­க­டித்­த­தா­கவும், இதனை ஒரு சூழ்ச்சி என்றும் அவர் குறிப்பி­டு­வதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ சிங்­கள மக்கள் மத்­தியில் தன்னை அவர்­களின் கதா­நா­ய­க­னாக மட்டும் நிறுவிக் கொள்­ள­வில்லை.

அதற்கு அப்பால், உள்­ளூர ஒரு இன­வாத உணர்வும் தீவி­ர­மாகப் பரப்­பப்­பட்டும் வரு­கி­றது.

TodaysNugegoda_6நுகே­கொடை கூட்டம் மஹிந்த ராஜபக் ஷவின்  செல்­வாக்கை நிரூ­பிப்­ப­தற்­கா­னது என்­பதை விட அவ­ரது அர­சியல் மீள்வருகையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­னது என்றே கூறலாம்.

பண்­டைய காலங்­களில் மன்­னர்­களின் வரு­கையை அறி­விக்க கட்­டி­யக்­கா­ரர்கள் வரு­வது போல, மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வ­ரு­கையை அறி­விப்­ப­தற்­கான – கட்­டியம் கூறு­வ­தற்­கான கூட்­டமே நுகே­கொ­டையில் நடந்­தி­ருக்­கி­றது.

கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்­னரும், கூட மஹிந்த ராஜபக் கஷ அரசியலில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­க­வில்லை.

அதுவே அவ­ரது அர­சியல் அபி­லாசை முற்றுப் பெறா­துள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதற்குப் பிந்­திய கடந்த ஆறு வாரங்­களில், மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக அர­சி­ய­லுக்கு வரப் போவ­தாக பேச்­சுக்கள் அடி­பட்­டன.

ஆனாலும் அவர் தனக்கு அத்­த­கைய எண்ணம் கிடை­யாது என்று சில சந்­தர்ப்­பங்­களில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும், தான் இனி அர­சி­யலில் ஈடு­படப் போவ­தில்லை என்று திட்­ட­வட்­ட­மாக ஒரு­போதும் அவர் அறி­வித்­தி­ருக்­க­வில்லை.

புலி­களைத் தோற்­க­டித்த – நாட்டை ஒன்­று­ப­டுத்­திய தலைவர் என்ற வகையில் சிங்­கள மக்கள் மத்­தியில் அவர் ஒரு பெரிய கதா­நா­ய­க­னா­கவே மதிக்­கப்­ப­டு­கிறார்.

அந்த இமேஜ் அவரை இன்­னமும் அர­சியல் கனவில் மிதக்கச் செய்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், பெரும்­பாலும் தங்­கா­லையில் உள்ள கால்டன் இல்­லத்தில் தங்­கி­யுள்ள மஹிந்த ராஜபக் ஷவைப் பார்க்க தினமும், 50 வரை­யான பஸ்­களில் சிங்­கள மக்கள் செல்­வ­தாக செய்­திகள் வெளியாகின்றன.

கதிர்­கா­மத்­துக்கு யாத்­தி­ரை­யாகச் செல்­கின்ற மக்கள், இப்­போது கால்டன் இல்­லத்­துக்குச் சென்று மஹிந்த ராஜபக் ஷவுக்­கான தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

சிங்­களக் கிரா­மங்கள், நக­ரங்­களில் இருந்து பஸ்கள் தினமும் கால்டன் இல்­லத்­துக்குப் படை­யெ­டுப்­பதை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

இது ஒரு நாடகம் என்றும், திட்­ட­மிட்டு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க குறிப்­பிட்­டி­ருந்­தாலும், அதனை முற்­றிலும் சரி­யா­ன­தாக ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

ஏனென்றால் சிங்­கள மக்கள் மத்­தியில் மஹிந்த ராஜபக் ஷ அந்­த­ள­வுக்கு செல்­வாக்குப் பெற்­றி­ருக்­கிறார்.

சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் போர் ஒரு நிம்­ம­தி­யற்ற நிலை­யையே ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இரா­ணு­வத்தில் இருந்த அவர்­களின் பிள்­ளை­க­ளி­னதோ, கண­வன்­மா­ரி­னதோ எதிர்­காலம் பற்­றிய அச்சம், ஒவ்­வொரு வீடுகளிலும் இருந்து வந்­தது.

அந்த அச்­சத்தை அவர்­களின் மனதில் இருந்து நீக்­கி­யது மஹிந்த ராஜபக் ஷ தான் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

 TodaysNugegoda_2மஹிந்த ராஜபக்ஷவும் அவ­ரது குடும்­பத்­தி­னரும், எவ்­வ­ளவு தான் மோச­டி­களை, ஊழல்­களைச் செய்­த­தாக குற்­றம்­சாட்டப்பட்­டி­ருந்­தாலும், அதி­கார துஷ்­பி­ர­யோகம், சர்­வா­தி­கார ஆட்சி பற்றி குற்­றம்­சாட்­டப்­பட்­டாலும், அவை­யெல்லாம் சாதா­ரண சிங்­கள மக்­களின் மனங்­களைப் பாதிக்­க­வில்லை.

அவர்கள், தமது பிள்­ளை­களோ, கண­வன்­மாரோ, உற­வி­னர்­களோ போரில் கொல்­லப்­ப­டு­வதில் இருந்து காப்­பாற்­றி­ய­வ­ரா­கவே மஹிந்த ராஜபக் ஷவைப் பார்க்­கின்­றனர்.

இந்த பிளஸ் பொயின்ட் தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இப்­போது மட்­டு­மல்ல எப்­போதும் இருக்கக் கூடிய பலம். இதனை வைத்துத் தான், தமது அடுத்த அர­சியல் பிர­வே­சத்­துக்கு அடித்­தளம் போட்­டி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ.

ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­யுற்ற பிறகு, தொடர்ந்தும் அர­சி­யலில் இருந்து, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது ஒரு காத்­தி­ர­மான, கன­மான அர­சியல் தலை­மைக்­கு­ரிய பண்­பாக கரு­தப்­ப­ட­மாட்­டாது. அதனால் தான், தனது தோல்­விக்குப் பின்னர் ஒரு சிறிய இடை­வெ­ளியை அவர் விட்­டி­ருந்தார்.

அந்த இடை­வெ­ளிக்குள், புதிய அர­சாங்கம் மகிந்த ராஜ­பக்­சவை அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தற்கும், குற்­றச்­சாட்­டு­களை முன்வைக்கவும் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

அதே­வேளை, தான் இல்­லாத காலத்தில் ஏற்­படக் கூடிய வெறுமை நிலையை – அர­சியல் இடை­வெ­ளியின் பாத­கத்­தன்­மையை தென்­னி­லங்கை மக்கள் மற்றும் கட்­சி­க­ளிடம் உணரச் செய்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

மஹிந்த ராஜபக்ஷ இல்­லாமல் போனால், தமது எதிர்­காலம் கேள்விக் குறி­யாகி விடும் என்­று­ணர்ந்த விமல் வீர­வன்ஸ, தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் தான், அவரை மீண்டும் முன்­னி­றுத்­து­வதில் முக்­கிய பங்­காற்­று­கின்­றனர்.

மஹிந்த இல்­லாத சிறு இடை­வெ­ளிக்குள் இவர்கள் அந்த ஆபத்தின் தன்­மையை உணர்ந்­தி­ருக்­கி­றார்கள். எனவேதான் அதனை சிங்­கள மக்கள் முன் கொண்டு சென்று மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வான மக்கள் அலை­யாக மாற்றும் முயற்சியில் இறங்­கி­யி­ருக்­கின்­றனர்.

ஒரு பக்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இருந்­தாலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­குள்­ளேயும், மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வான பலரும் இருக்­கின்­றனர்.

அவர்­க­ளையும் நுகே­கொடை கூட்­டத்தில் காண முடிந்­தது. இந்த எல்லாத் தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைக்கும் முதல் முயற்­சியே நடந்­தி­ருக்­கி­றது.

இந்தக் கூட்டம் பற்றி தனக்கு ஒன்றும் தெரி­யாது என்றும், தான் தங்­கா­லையில் இருந்து வரு­வ­தா­கவும், வெலிக்­கடைச் சிறையில் திஸ்ஸ அத்­த­நா­யக்­கவைப் பார்க்கச் சென்­ற­போது கூறி­யி­ருந்தார் மஹிந்த ராஜ­பக் ஷ.

தங்­கா­லைக்கும் கொழும்­புக்கும் இடையில் எவ்­வ­ளவு தூரம் என்­பதை விட, கொழும்பில் என்ன நடக்­கி­றது என்­பதை உலகின் எந்த மூலையில் இருந்தும் பார்த்து விடக் கூடிய வச­தி­ப­டைத்த இன்­றைய உலகில், தங்­கா­லையில் இருந்த தனக்கு நுகேகொடை கூட்டம் பற்றி ஒன்­றுமே தெரி­யாது என்று, மஹிந்த ராஜபக் ஷ கூறி­யது அவ­ரது உச்­சக்­கட்ட நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­யது.

அது­மட்­டு­மல்ல, தான் இந்தக் கூட்­டத்தில் கலந்து கொள்ளப் போவ­தில்லை என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அந்தக் கூட்டத்தில் எவ்­வ­ளவு பேர் கலந்து கொள்­வார்கள் என்­பதை தெரிந்து கொள்ள முன்­னரே, அதன் கன­ப­ரி­மா­ணங்­களை உள்ளடக்­கிய அறிக்கை ஒன்றை தயான் ஜய­தி­லக மூலம் வாசிக்கச் செய்­தது அதை­விடப் பெரிய நடிப்பு. இவை­யெல்லாம், “மாமன்னர் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் வருகிறார்… பராக்…. பராக்….” என்று கூறுவதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே.

இப்போது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் .பிரதமர் பதவிக்காக போட்டியிட வேண்டும் என்ற மனோநிலை தெற்கிலுள்ள சிங்கள மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜனா­தி­ப­தி­யாக இருந்த அவர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை நியா­யப்­ப­டுத்­த­வ­தற்­காக, இது மக்களின் அவா, – அபிலாசை என்று காட்டி அதை நிறைவேற்றவே மீள் பிரவேசம் செய்யப்போவதாக காட்டிக் கொள்வதே இந்த நாடகத்தின் முழுக்கதை.

இந்த நாடகத்தின் கடைசிக் காட்சி மஹிந்தவின் மீள் அரசியல் பிரவேசத் துடன் தான் முடிவடைய வேண்டும். அது தான் நியதி.

ஆனால், இடையில் இந்தக் கதையில், திடீரென வில்லன்கள் யாரும் புகுந்து கொள்கிறார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

-கபில்-

Share.
Leave A Reply