உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி, 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று வியாழக்கிழமை(26) மெல்போர்னில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.

136 பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிரடியாக ஆடிய தில்ஷான், 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களை விளாசினார்.

குமார் சங்கக்காரவும் தனது பங்குக்கு 76 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

333 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 47 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

தில்ஷன், சங்ககாரா அதிரடி சதம்.. வங்கதேச வெற்றிக்கு 333 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

1610351054Untitled-1மெல்போர்ன்: வங்கதேசத்துக்கு எதிராக டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்துள்ளது.

வங்கதேசம் தனது முதல் போட்டியில் ஆப்கனை வீழ்த்தியிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அதேபோல இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற நிலையில், ஆப்கனை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனிடையே வங்கதேசம் மற்றும் இலங்கையிடையே மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 

திரிமன்னே மற்றும் தில்ஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சில் திரிமன்னே மிகவும் திணறினார்.
மோர்டசா வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் ஸ்லிப்பில் திரிமன்னே கொடுத்த கேட்ச் மிஸ் செய்யப்பட்டதால் அவர் தப்பினார். இருப்பினும் மறுமுனையில் தில்ஷன் அதிரடியாக ஆடிவந்தார்.
78 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில், ருபல் ஹொசைன் பந்து வீச்சில், தெஸ்கின் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து திரிமன்னே அவுட் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய சங்ககாராவும் அதிரடி காண்பித்தார்.
தில்ஷனும், சங்ககாராவும் வங்கதேச பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச பவுலர்கள் செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்கள் முடிவில் இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்தது.
தில்ஷன் 22 பவுண்டரிகள் உதவியுடன் 146 பந்துகளில் 161 ரன்களும், சங்ககாரா, 1 சிக்சர், 13 பவுண்டரிகள் உதவியுடன் 76 பந்துகளில் 105 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
தனது 400வது ஒருநாள் போட்டியில் சங்ககாரா, இந்த சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இது சங்ககாராவின் 22வது சதமாகும்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி, 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று வியாழக்கிழமை(26) மெல்போர்னில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில்  வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.

136 பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிரடியாக ஆடிய தில்ஷான், 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களை விளாசினார்.

குமார் சங்கக்காரவும் தனது பங்குக்கு 76 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

333 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 47 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

– See more at: http://www.tamilmirror.lk/140630#sthash.4DmyN814.dpuf

Share.
Leave A Reply