ஹவுரா: பெண்கள் என்றாலே ஆண்கள் செய்யும் கேலி கிண்டல்களை பொறுத்துக்கொண்டு எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விடுவார்கள் என்று நினைத்தது அந்தக்காலம்.

இன்றோ திட்டுகிற ஆண்களின் வாயை அடித்து உதைத்து பல்லை கழற்றுகிற பெண்கள்தான் இருக்கின்றனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலை விசயமாக டாக்ஸியில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கும் இந்த டாக்ஸி டிரைவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரிக்கவே அந்தப் பெண்மணியை தகாத வார்த்தையில் அந்த டிரைவர் திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமுற்ற அந்த பெண்மணி, நடுரோட்டில் சிக்னலுக்கு நிற்கும் போது டாக்ஸிவிட்டு இறங்கினார். டிரைவரையும் வெளியே வரச்சொன்னார். தன்னை திட்டிய டிரைவரின் கன்னத்தில் நான்கைந்துமுறை அறைந்தார்.
சாத்து சாத்தென்று சாத்தினார். ஹவுராவில் அதிக ஜனநெருக்கம் நிறைந்த சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இதனால் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி, அந்த பெண்மணியை சமாதானம் செய்யவே, திட்டிக்கொண்டே நகர்ந்தார் அந்த பெண்மணி

Share.
Leave A Reply