பள்ளிப்பருவத்தில் நாம் எல்லோரும் நிச்சயம் எதிர்கொண்டிருக்கக்கூடிய கேள்வி நீ என்னவாக போகிறாய்? மருத்துவர், ஆசிரியர் என்று எல்லோரும் நம் கனவுகளை சொல்லியிருந்தாலும் வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் அந்த கனவுகளிலிருந்து விலகி வெகு தூரத்தில் நின்று கொண்டிருப்போம்.
இதுபோல் தன் கனவை விட்டு விலகி வெகு தூரத்திற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதியாக மாறிய முகமது எம்வாசியின் பள்ளிப்பருவ புகைப்படத்தை பிரிட்டன் நேற்று வெளியிட்டது. இது அவரது சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
An early school photo of Mohammed Emwazi (The Sun/News Syndication)
எம்வாசிக்கு 6 வயதாகும் போது குவைத்திலிருந்து இங்கிலாந்து வந்த அவரது பெற்றோர், புனித அன்னை மெக்டலீன் பள்ளியில் அவரை சேர்த்தனர்.
பள்ளியில் அவருடன் படித்த மாணவர்கள், எம்வாசி அமைதியான பையன் அவனுக்கு கடவுளை விட கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்கின்றனர்.
ஆசிரியர்களோ அவன் கடினமாக உழைப்பவன். ஒரு நல்ல மாணவனுக்கான அனைத்து குணங்களையும் கொண்டவன் என்கின்றனர்.
An early school photo of Mohammed Emwazi (The Sun/News Syndication)
10 வயதில் பள்ளி ஆண்டு புத்தகத்தில் தனக்கு பிடித்த கம்யூட்டர் விளையாட்டு “கொல்வதற்கான நேரம்” என்பதையும், பிடித்த புத்தகம் “அந்த அவலட்சணமான உருவத்தைக் கொல்வது எப்படி” என்ற புத்தகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் 30 வயதில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்ற கேள்விக்கு ஒரு கால்பந்து அணியில் கோல் போட்டுக்கொண்டிருப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகே எம்வாசியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் 2009-ம் ஆண்டு ஆப்பிரிக்க காடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அதற்கு பிறகான வருடங்களில் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மனித வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது.