சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் அரை நிர்வாணமாக வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
திருமணமாகாதோரின் தினத்தை முன்னிட்டு, வுஹான் நகரிலுள்ள இவ்வர்த்தக நிலையம் இந்த அறிவிப்பை விடுத்திருந்தது.
முதலில் வரும் 200 வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆடைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
நூற்றுக்கணக்கான மொடல்களும் உள்ளாடைகளுடன் இந்நிகழ்வில் பங்குபற்றுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து பெரும் எண்ணிக்கையான ஆண்களும் பெண்களும் உள்ளாடைகளுடன் அவ்வர்த்தக நிலையத்தில் திரண்டனர்.