உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு எதிர்­வரும் 13 ஆம் திகதி இலங்கைவர­வுள்ள இந்­திய பிர­தமர் நரேந்திர மோடி அன்­றைய தினம் மாலை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை நிகழ்த்­த­வுள்ளார்.

மாலை 5 மணி­யளவில்  இந்­திய பிர­த­மரின் உரை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்திய பிர­த­மரின் இலங்கை பாரா­ளு­மன்ற உரை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும் என்றும் அது வர­லாற்று ரீதி­யான நிகழ்­வாகும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

எதிர்­வரும் 13 ஆம் திகதி வௌ்ளிக்­கி­ழமை இந்­திய பிர­த­மரின் உரைக்­காக பாரா­ளு­மன்றம் விசே­ட­மாக கூட­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இதற்­காக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்­திய பிர­தமர் யாழ்ப்­பாணம் மற்றும் கண்டி ஆகிய பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்­ய­வுள்ளார். அத்­துடன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­த­வுள்ளார்.

வடக்­குக்கு விஜயம் செய்யும் இந்­திய பிர­தமர் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

1987 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இந்­திய பிர­தமர் ஒருவர் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வர­வுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும்.

இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு முன்னாள் இந­திய பிர­தமர் மன்­மோகன் சிங் இலங்­கையில் நடை­பெற்ற சார்க் மாநாட்டில் கலந்­து­கொள்ள வந்­தி­ருந்­தாலும் அரச விஜ­ய­மாக வர­வில்லை.

இதே­வேளை இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­துக்கு முன்னர் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்­கைக்கு எதிர்­வரும் 6 ஆம் திகதி வர­வுள்ளார்.

இதன்­போது இந்­திய பிர­த­மரின் விஜ­யத்­துக்­கான ஏற்­பா­டுகள் குறித்து ஆரா­ய­வுள்ள சுஷ்மா சுவராஜ் பல தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார் என்று வெளி­வி­வ­கார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்

Share.
Leave A Reply