பன்றி காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு 1115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது. இவர் தனுஷ் ஜோடியாக ராஞ்சனா – படத்தில் நடித்தவர். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சல்மான்கானுடன் பிரேம் ரத்தன் தான் பயோ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள கொண்டல் பகுதியில் நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து சோனம் கபூரை பன்றி காய்ச்சல் தாக்கியது. மும்பையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதித்துள்ளனர். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சோனம் கபூர் பன்றி காய்ச்சல் தாக்கியது சக நடிகர்,நடிகைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் பன்றி காய்ச்சல் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

திரிஷாவும் ஜெயம் ரவியும் அப்பாடக்கர் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

தங்களுக்குரிய காட்சிகளில் நடித்து முடித்ததும் திரிஷாவும் ஜெயம் ரவியும் முக கவசம் அணிந்து கொள்கின்றனர். முக கவசம் அணிந்த படத்தை திரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

thrish

தடுப்பூசி
அடுத்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை த்ரிஷா போட்டுக் கொண்டார். அதைப் படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

04-1425450998-trisha-black-600பன்றிக் காய்ச்சலா?
இதனால் த்ரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா? என அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், த்ரிஷாவோ தனக்கு பன்றிக்காய்ச்சல் ஏதும் இல்லையென்றும், நலமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கைக்காக தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

04-1425451034-sonam-kapoor

மற்ற நடிகர்களும்…
ஏற்கெனவே, பாலிவுட் நடிகை சோனம் கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்திலும் ஆங்காங்கே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வெளிப்பட்டு வருகிறது. இதனால் தமிழ் நடிகர் நடிகைகள் சத்தமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதை த்ரிஷா பகிரங்கப்படுத்திவிட்டார்.
Share.
Leave A Reply