ரத்தத்தை உறைய வைக்கும் நாய்சண்டை திருவிழா: கடும் எதிர்ப்பையும் மீறி சீனமக்கள் கோலாகல கொண்டாட்டம்-

வடசீனாவின் ஜிஷான் கவுண்டியில் உள்ள சஞ்ஜியாவோ கிராமம். கம்பி வலைகளால் செய்யப்பட்ட தடுப்புக்கு உள்ளே சிலர் பதுங்கியிருக்கின்றனர்.

கம்பி தடுப்பை திறந்து வெறிபிடித்து உறுமும் தன் நாயை சங்கிலியால் இழுத்தபடி ஒருவர் உள்ளே நுழைகிறார். மெல்ல தன் நாயை விடுவித்து விட்டு அவரும் ஒதுங்கிக்கொள்கிறார்.

அவ்வளவுதான், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு போட்டிக்கு தயாராக இருக்கும் மற்றொரு நாயை அவரது நாய் மூர்க்கத்தனமாக தாக்கத்தொடங்குகிறது.

பதிலுக்கு அந்த நாயும் ஆவேசமாக தாக்க நாயின் உரிமையாளர்கள் உட்பட தடுப்பிற்கு வெளியே இருக்கும் மக்களும் ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கின்றனர்.

சீனாவில் இது போன்ற நாய் சண்டை வசந்த காலத்தின் முடிவையொட்டி பல கிராமங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது(!!!). போட்டியில் கலந்து கொள்ள பணம் எதுவும் கட்ட தேவையில்லை.

சொந்தமாக நாய் வைத்திருக்கும் தகுதி ஒன்றே போதுமானது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் நாயின் உரிமையாளருக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டும் சிறிய சைனா கூஜாவும் பரிசாக வழங்கப்படும்.

இந்த கொடூரமான போட்டியில் பங்கேற்கும் பல நாய்களுக்கு இரத்தக் காயம் ஏற்படும். சில நாய்கள் இறந்து கூட போகும். ஆனால் சீனாவில் வலுவான மிருகவதை தடுப்பு சட்டங்கள் இல்லாததால் இந்த போட்டியை நடத்துபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்று சொல்லி போலீசார் ஒதுங்கிக்கொள்கின்றனர்.

இதில் ஈடுபடுவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என பிராணிகள் உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போட்டியை நடத்துபவர்களில் ஒருவரான ஷி-பான்(45) கூறுகையில் “நகரத்தில் இருப்பவர்கள் நாய்சண்டையை எதிர்க்கின்றனர்.

அவர்களுக்கென்ன காசு கொடுத்தால் அனைத்து விதமான பொழுது போக்கையும் அனுபவிக்கலாம். ஆனால் எங்களை போன்ற கிராமத்து ஏழைகளுக்கோ இதுதான் பொழுது போக்கு.

நகரத்தில் இருப்பவர்களின் விமர்சனத்தை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக இந்த போட்டியை நடத்துவோம்” என்கிறார்.

 dogdog-1 dog-2dog-3dog-4dog-5dog-7dog-6

Share.
Leave A Reply