டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார்.
ஆவணப்படமாக இப்பேட்டியை லெஸ்லி தயாரிக்க, உலக பெண்கள் தினமான வரும் 8-ம் திகதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆவணப்படம் எடுக்க அனுமதி வழங்கியது குறித்தும், குற்றவாளியின் பேட்டி குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி நோட்டீஸ் அளித்தார்.
இதையடுத்து நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள், எப்பொழுது நிர்பயா குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்று கேள்வியெழுப்பினர். குறிப்பாக ஜெயா பச்சன் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் மிகுந்த ஆவேசத்துடன் பேசினர்.
லோக்சபாவிலும் இதே நிலை தான் நீடித்தது. எம்.பி.க்களின் ஆவேச பேச்சுக்கு பின் பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாகவும், குற்றவாளியிடம் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் இந்தியா தடை விதித்துள்ள போதும், நேற்றிரவே நிர்பயா குறித்த ´இந்தியாவின் மகள்´ ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது. பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. ஆவணப்படத்தை பார்ப்பதற்கான விருப்பம் அதிகரித்ததால், முன் கூட்டியே ஒளிபரப்பியதாக பி.பி.சி. கூறியுள்ளது.
இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒப்புதலுடன் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது என்றும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.
முன்னதாக நிர்பயா என்ற பெயரில் அழைக்கப்பட்ட, பிஸியோதெரபி மாணவி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிர்பயாவை குடிகார கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது.
பின் அவரை தாக்கி சாலையோரம் வீசியது. உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
துஷ்பிரயோத்தின் போது அமைதியாக இருந்திருந்தால்தாக்கியிருக்கமாட்டோம் : குற்றவாளி ( வீடியோ)
பாலியல் துஷ்பிரயோத்தின் போது அமைதியாக இருந்திருந்தால் தாக்கியிருக்கமாட்டோம் என்று டில்லி மாணவி நிர்பயாவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிகளில் ஒருவதான முகேஷ் சிங் கூறியுள்ளமைக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில்பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழ்ந்த மாணவி நிர்பயா தொடர்பான ஆவணப்படம் மாணவியின் பேற்றோருக்கு பிரத்தியேகமாக காண்பிக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து திருப்தியடைந்த அவர்கள் இந்தப் படத்தை ஆதரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஆவணப்டத்தில் குற்றவாளிகளில் ஒருவரான பேருந்தின் சாரதி முகேஷ் சிங்கங் வழங்கியுள்ள பேட்டியில் பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் மாணவி அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என்று கூறியுள்ள கருத்துக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில்,
இதைப்போன்ற ஒரு கருத்தை வெளியிடுவது என்பது குற்றவாளிக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல. இதைப்போன்ற கருத்துகளை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் கொடுங்குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவர் கூறலாம்.
கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று வாதிடுபவர்கள் அந்த வேதனை என்ன என்பது தெரியாதவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களை தூக்கிலிடவில்லை என்றால் அது பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்து விடும்.எல்லா கற்பழிப்பு குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என நான் அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மாணவியின், தந்தை கூறுகையில், இது எனது மகள் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல. இந்த கருத்தின் மூலம் முகேஷ் சிங் இந்த சமூகத்துக்கே கேள்வி எழுப்பியுள்ளதோடு, இந்த நாட்டின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.
மேலும், நான் அரசை தொடர்பு கொண்டு அவனை தூக்கிலிடுமாறு கேட்டுக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிர்பயா சம்பவம் தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியா தடை விதித்துள்ள நிலையில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பி.பி.சி. தொலைக்காட்சி சேவையில்யில் நேற்றுமுன்தினம் இரவு குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Delhi Nirbhaya Full Documentary BBC Storyville India’s Daughter