கன­க­ரா­யன்­குளம் மன்­ன­குளம் சந்­தியைச் சேர்ந்த பாட­சாலை மாண­வியின் மரணம் குறித்து முறை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­க­பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வவு­னியா மாவட்ட வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­களும் கூட்­டாகக் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கன­க­ரா­யன்­குளம் மகா­வித்­தி­யா­லய  மாண­வி­யான 15 வய­து­டைய செல்­வ­ராசா சரண்யா என்ற சிறுமி சிவ­ராத்­தி­ரியை முன்னிட்டு, தெரிந்­த­வர்­க­ளுடன்   திருக்­கே­தீஸ்­வரம் ஆல­யத்­திற்குச் சென்­ற­தா­கவும்,

இரண்டு   தினங்கள் கழித்து திரும்பி வந்த அவர், சுக­யீனம் கார­ண­மாக மாங்­குளம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனும­திக்­கப்­பட்டு, மேல் வைத்­தி­யத்­திற்­காக, கிளி­நொச்­சிக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, அவர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார்.

தொண்டை வலிகின்­றது, கதைக்க முடி­யாது என்ற கார­ணத்­திற்­கா­கவே அவர் வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், இவ­ரு­டைய மரணம் தொடர்­பான விசா­ர­ணை­களின் பின்னர் நடை­பெற்ற மருத்­துவ பரி­சோ­த­னையில், இந்தச் சிறுமி மோச­மான முறையில் பலரால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­ட­தாக சிறு­மியின் அம்­மம்­மா­வுக்கும்,  இந்த சிறு­மியின் மர­ணத்­தை­ய­டுத்து, அவர்­க­ளுக்கு உத­வி­பு­ரி­வ­தற்­காகச் சென்­றி­ருந்த ஊர் முக்கியஸ்தர்க­ளி­டமும், வைத்­தி­ய­சா­லையில் தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, கிளி­நொச்சி மரண விசா­ரணை அதி­காரி திரு­லோ­க­மூர்த்தி விசா­ர­ணை­களை நடத்­தி­யதன் பின்னர் சிறுமியின் சடலம் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது, இத­னை­ய­டுத்து சிறுமியின் இறு­திக்­கி­ரி­யைகள் ஞாயிற்றுக்கிழமை நடை­பெற்­றுள்­ளன.

சுக­யீனம் கார­ண­மாக கடந்த புதன்­கி­ழமை மாங்­குளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­திக்­கப்­பட்ட இந்தச் சிறுமி மறுநாள் வியாழக்­கி­ழமை  கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லைக்கு மேல் சிகிச்­சைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ளார்.

அங்கு அவர் வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ர­வுக்குப் பின்னர் மர­ண­மா­கி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்டு வல்­று­ற­வுக்கு இந்தச் சிறுமி உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாகத் தெரி­விக்கப்­பட்­டுள்ள போதிலும், சிறு­மியின் மருத்­துவ பரி­சோதனை அறிக்கை இன்னும் தங்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை என கன­க­ரா­யன்­குளம் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தனது அம்­மம்மா சீதை­யம்­மா­விடம் வளர்ந்து வந்த இந்த சிறு­மிக்குப் பெற்றோர் இரு­வரும் இல்லை. இயல்­பாக பாடசாலைக்குச் சென்று வந்த இந்தச் சிறுமி, அவ­ரு­டைய மூத்த சகோ­தரன் தங்­கி­யி­ருக்­கின்ற வீட்டில் உள்ள இரண்டு சிறுமிகளுடன் நட்பு கொண்­டி­ருந்­த­தா­கவும், அந்தச் சிறு­மி­களின் தாயா­ரு­டனும் நன்­றாகப் பழகி வந்­த­தா­கவும், அவர்களுடைய வீட்டில் இருந்தே இந்தச் சிறு­மியும் ஏனை­யோரும் திருக்­கே­தீஸ்­வரம் போய் வந்­த­தா­கவும் தெரிவிக்கப்படுகின்­றது.

கடந்த மாதம் 16 ஆம் திகதி திருக்­கே­தீஸ்­வரம் சென்­றி­ருந்த இந்தச் சிறுமி இரண்டு தினங்­களின் பின்னர் 18 ஆம் திகதி திரும்பி வந்து, ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த புதன்­கி­ழ­மையே சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சிறு­மியை வைத்­தி­ய­சா­லைக்குக் கூட்டிச் சென்று அனு­ம­தித்த அந்த வீட்டுப் பெண், இது குறித்து சிறு­மியின் அம்­மம்மா­விற்கோ அல்­லது  வேறு உற­வி­னர்­க­ளுக்கோ உட­ன­டி­யாகத் தகவல் தெரி­விக்­க­வில்லை என்­பதும் சந்­தே­கத்தை ஏற்படுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்தச் சம்­பவம் குறித்து தகவல் அறிந்த வன்னி மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான வினோ நோக­ரா­த­லிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.தியா­க­ராஜா, ஜி.ரி.லிங்­க­நாதன், தர்­ம­பால சென­வி­ரத்ன ஆகியோர் உயி­ரி­ழந்த சிறு­மியின் அம்­மம்மா மற்றும் அந்தக் கிரா­மத்து முக்­கி­யஸ்­தர்கள், மாதர் சங்­கத்­தினர் உள்­ளிட்ட பல்வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து விப­ரங்­களைக் கேட்­ட­றிந்­துள்­ளனர்.

அதன்­போது, சிறுமி சரண்யா கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதன் கார­ண­மா­கவே அவர், அநி­யா­ய­மாக உயி­ரி­ழந்­துள்ளார் என்றும், இதனை பிரேத பரி­சோ­தனை நடத்­திய வைத்­தியர் ஒருவர் தெரி­வித்­துள்­ள­தா­கவும், இந்த சிறு­மியின் மரணம் தொடர்­பாக மரண விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்ட போதிலும்,

இன்னும் எவ­ருமே பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­ப­டாமல் இருப்­பது தங்­க­ளுக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவும், இதனால், இந்த விட­யத்தை இருட்­ட­டிப்பு செய்­வ­தற்­காக சிலர் முயன்று வரு­வ­தா­கவும் எனவே, இது­வி­ட­யத்தில் நீதி கிடைப்ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் முக்­கி­யஸ்­தர்கள் கோரி­யி­ருக்­கின்­றார்கள்.

பாட­சாலை மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் உயி­ரி­ழந்­தி­ருப்­பது பொலிஸாருக்கோ, சிறுவர் பாது­காப்பு மற்றும் சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரி­க­ளுக்கோ அல்­லது மகளிர் மற்றும் சிறுவர் நலன்­க­ளுக்­கான பிரிவின் அதி­கா­ரி­க­ளுக்கோ சாதா­ரண விட­ய­மா­கி­விட்­டதோ?

அதன் கார­ண­மா­கத்தான் சிறுமி சரண்­யாவின் மர­ணத்தின் பின்­னரும் அவர்கள் எவரும் இந்த விட­யத்தில் எந்­த­வி­த­மான அக்­க­றையும் காட்­டாமல் மௌன­மாக இருக்­கின்­றார்கள் என்று ஊர் முக்­கி­யஸ்­தர்கள் சீற்­றத்­தோடு மக்கள் பிர­தி­நி­தி­க­ளிடம் வினா எழுப்­பி­யிருக்­கின்­றார்கள்.

இத­னை­ய­டுத்து, கன­க­ரா­யன்­குளம் பொலிஸ்  நிலை­யத்தின் குற்­றப்­பி­ரிவு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவு பொறுப்பதி­காரி ஆகி­யோ­ரையும் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­களும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் சந்­தித்து சரண்­யாவின் மரணம் தொடர்­பான விப­ரங்­களைக் கேட்­ட­றிந்­துள்­ளனர்.

இந்த மரணம் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தாகத் தெரி­வித்த கன­க­ரா­யன்­குளம் குற்­றப்­பி­ரிவு பொலிஸ் பொறுப்ப­தி­காரி, சிறுமி சரண்யா மீது கூட்டு பாலியல் வல்­லு­றவு குற்றம் புரி­யப்­பட்­டி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

ஆயினும் இந்தச் சிறு­மியின் மரணம் குறித்து இன்னும்   தெளி­வில்­லாத கார­ணத்­தினால், அவ­ரு­டைய உடலின் சில பாகங்கள் அரச பகுப்­பாய்வு  திணைக்­க­ளத்தின் பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த அறிக்­கையைத் தாங்கள் எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

அதே­நேரம், சிறு­மியின் மரணம் தொடர்­பான இறுதி மருத்­துவ பரி­சோ­தனை அறிக்கை தங்­க­ளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கன­க­ரா­யன்­குளம் குற்­றப்­பி­ரிவு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­துள்ளார்.

அதே­நேரம், இந்த மரணம் தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் விசா­ர­ணைகள் நடத்தி வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இன்னும் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் பொலிசார் மக்கள் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­துள்­ளனர்.

தங்­க­ளுக்குக் கிடைத்த தக­வல்­க­ளின்­படி, சிறுமி  தங்­கி­யி­ருந்த வீட்­டிற்கு அடிக்­கடி சென்று வந்த நபர் ஒருவர் இறந்த சிறுமி சரண்யா மற்றும் அந்த வீட்டுப் பெண்ணின் இரு மகள்­க­ளா­கிய சிறு­மிகள் ஆகி­யோ­ருக்கு கைத்­தொ­லை­பே­சியில் பாலியல் வீடியோ காட்­சி­களைக் கொடுத்து பார்க்கச் செய்­தி­ருந்­த­தா­கவும்….,

மற்­று­மொ­ருவர் தன்னை பொலிஸ் சி.ஐ.டி என கூறிக்­கொண்டு அந்த வீட்­டிற்கு அடிக்­கடி சென்று வரு­வ­தா­கவும், அதேநேரத்தில் பெற்­றோர்கள் இல்­லாத நிலையில் தமது அம்­மம்­மா­வுடன் வாழ்ந்து வந்த சிறுமி சரண்­யாவின் மூத்த சகோதரன் இரண்டு மகள்­க­ளுடன் வசித்து வந்த பெண்ணின் வீட்டில் ஏன் வசித்து வந்தார் என்றும்….,

அத்­துடன் அவர் ஏன் தனது சகோ­தரி சரண்­யா­வையும் அங்கு அடிக்­கடி சென்று வர அனு­ம­தித்­தி­ருந்­த­துடன், திருக்­கேதீஸ்வரத்­திற்குப் போய் வந்ததன் பின்னர் சிறுமி சரண்யா என்ன காரணத்திற்காக அம்மம்மாவிடம் செல்லாமல் அந்த வீட்டிலேயே தங்கியிருந்ததன் பின்னர் சுகயீனம் என தெரிவித்து அம்மம்மாவுக்கு, தகவல் தெரிவிக்காமல் …

police
சரண்யாவை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் கனகராயன்குளம் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், மாங்குளத்தில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபரையும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கூட்டுப் பாலியல் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மரணமாகிய சிறுமி சரண்யாவின் மரணம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

வன்னியில் மாணவி பலாத்காரத்தால் படு கொலை!

04-03-2014

கனகராயன்குளம் கொல்லர் புளியங்குளத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா (வயது 16) கடந்த 27.02.2015 அன்று காடையர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

சரணிகாவின் குடும்பத்தினரை வன்னி எம்.பிக்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் 03.03.2015 அன்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை  உடனடியாக  கைதுசெய்து  சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினர்.

suside-01suside-02suside-04

s-saranika-rape1-600x450vanni. sivaskthi

Share.
Leave A Reply