இரண்டாம் உலகப்போரின் போது மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலான முசஷி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் போது முசஷி என்ற போர்க்கப்பலைப் பயன்படுத்தி வந்தது. அப்போது இந்தக்கப்பல் தான் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிநவீன போர்க்கப்பலாக இருந்தது.

 1

இந்நிலையில், 1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி அந்தக்கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது அமெரிக்க விமானப் படையினரின் குண்டு வீச்சு காரணமாக கடலில் மூழ்கியது. அதில் இருந்த ஆயிரம் வீரர்களும் உயிரிழந்தனர்.

2

இந்தக்கப்பலைக் கண்டுபிடிக்க அமெரிக்காவின் புதைபொருள் ஆய்வு நிறுவனம் ஒன்று தானியங்கி வாகனங்கள் மூலம் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அதில் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கிக்கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3

முசஷி கப்பல் சிபுயன் கடல் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் (3,280 அடி) ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

4

Share.
Leave A Reply