ரணில் விக்ரமசிங்கே   கூறிய   துணிவான   இக்கருத்தையிட்டு   ஒட்டுமொத்த   வடகிழக்கு வாழ் தமிழர்களும்   சந்தோசப்படுவார்கள.  ஆனால்    இந்தியாவின்  அரிவரிடிகளான    கூட்டமைப்பினர்களுக்கு  இது  ஒரு  அதிர்ச்சி  செய்தியாக இருக்கும்.

அப்படித்தான் சுடுவோம் : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டியது தானே? இங்கு எதற்காக வருகிறார்கள்?இது எங்கள் கடல் பகுதி.

இதற்குள் எல்லை தாண்டி வந்தால் நாங்கள் சுடுவோம். அவர்கள் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்தால் யார், எதற்காக சுடப்போகிறார்கள்? எனது வீட்டை தகர்க்க யாராவது முயற்சித்தால் எப்படி நான் சுடுவேனோ, அதே போன்று தான் இதுவும்.

எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிச் சென்றதால் தான் இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்றனர். ஆனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட  பிறகும் இத்தாலி மாலுமிகளை அவர்கள் நாட்டிற்கு செல்ல இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இத்தாலி மாலுமிகளுக்கு அளித்த கருணையை இந்தியா ஏன் இலங்கை விஷயத்தில் காட்ட மறுக்கிறது?

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிக்கே ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும்.

மகிந்த ராஜபக்சேவை அதிபராக்கியது யார்? தென்னிலங்கை மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது குறித்து ராஜபக்சேவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.

ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார்.பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த அமிர்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார்… இது தெரிந்த விஷயம்தான்.. இதை ராஜபக்சே கூட மறுத்தது கிடையாது.

பிரபாகரன் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியவர்களைத்தான் இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.

எங்களது கடற்பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் வரவேண்டும்? எங்கள் கடற்பரப்பை ஆக்கிரமித்தால் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுக் கொல்ல எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

Share.
Leave A Reply