தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக முதலீடுகளுக்கு பொறுப்பானவர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் சாம்ராஜ்.

சாம்ராஜ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும் அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவினதும் நேரடி கட்டுபாட்டில் சர்வதேச நாடுகளில் சுமார் 75 நாடுகளில் சேகரிக்கப்படும் நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் இருந்து வந்தார்.

சமாதான பேச்சு வார்த்தை காலத்தில் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை சாம்ராஜ் பெல்ஜியத்தில்  கொள்வனவு செய்து 20 மில்லியன் யூரோக்களை (2880 மில்லியன் ரூபாக்கள்) முதலிட்டிருந்தார்.

பிரான்சில் தங்கி இருந்து விடுதலைப் புலிகளின் முதலீடுகளை நிர்வகித்து வந்த சாம்ராஜ் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் பல கட்டிடங்களை கொள்வனவு செய்து அவற்றை மீள்வாடகைக்கும் விட்டு வந்தார்.

இவருக்கான திருமணம் விடுதலைப் புலிகளினால் ஆசிய நாடு ஒன்றில் முருகேசு ஜெயகணேஸ் பகீரதியுடன் நடத்தி வைக்கப்பட்டது. சாம்ராஜூக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

தற்போது சாம்ராஜ்ஜின் மனைவி வன்னிக்கு தாயாரை பார்க்க என்று வந்த சந்தர்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தயாருக்கு சுகவீனம் காரணமாகவே இலங்கை வந்ததாக தெரிவிக்கின்றபோதும் சாம்ராஜ்சின் மனைவி விடுதலைப் புலிகளால் வன்னியல் இறுதி யுத்தத்தில் புதைத்து வைக்கப்பட்ட பவுண் மற்றும் பணம் ஆகியவற்றை மீள் எடுத்து வேறு இடத்திற்கு நகர்த்த முற்பட்டதாக சந்தேகிக்கபடுகிறது.

கைது செய்யபட்டுள்ள சாம்ராஜ்சின் மனைவியும் குமார் குணரட்ணத்தின் மனைவியை போன்று தனது கணவனுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் தாம் விவாகரத்து பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் பீலா விட்டுள்ளார்.

இந்த பணம் அனைத்தையும் வன்னியில் பாதிக்கபட்ட மக்களுக்கு சாம்ராஜ்சும் அவரது மனைவியும் பகிர்ந்தளிப்பார்களா?

Share.
Leave A Reply