சிவகங்கை: தந்தை தன்னை எரித்துக்கொல்லப் போகிறார் என்று தெரிந்தும் தன்னுடைய நகைகளை தங்கைக்கு கழற்றிக் கொடுத்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த தமிழ்செல்வி.
நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்திற்குப் பிறகும் மனம் இளகாத தந்தை, தனது மகளை கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ளார்.
தமிழகத்தில் கவுரவக்கொலைகள் நடைபெறவில்லை என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து சில தினங்கள் கூட முடியவில்லை அதற்குள்ளாக சிவகங்கையில் சாதி மாறி காதலித்த மகளை கொடூரமாக எரித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாவின் விளிம்பில் இருந்த போது கூட தன்னுடைய நகைகளை தந்தையிடம் கழற்றிக் கொடுத்து உருக்கமாக பேசியுள்ளார் உயிரிழந்த தமிழ்ச்செல்வி.
kolaii
தமிழ்செல்வியின் காதல்
சிவகங்கை அருகே உடைகுளத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 47. இவரது மகள் தமிழ்ச்செல்வி, 19. கடந்த 3ஆம் தேதி, திடீரென தமிழ்ச்செல்வி இறந்தார். உடல் எரிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் விசாரணை
காதல் பிரச்னையில் அவரை, தந்தை தங்கராஜ் மற்றும் உறவினர்கள் கொன்று எரித்தது விசாரணையில் தெரிந்தது. தமிழ்ச்செல்வியின் எரிந்த உடலை, போலீசார் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஜாதி மாறி காதல்
தமிழ்செல்வியும் வேறொரு சமுதாயத்தை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து வந்தனர். இதற்கு தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் தந்தைக்கும்-மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தங்க ராஜின் எதிர்ப்பையும் மீறி தமிழ்ச்செல்வி, பூமிநாதனுடன் பழகி வந்துள்ளார். ஆத்திரத்தில் கொலை
ஆத்திரத்தில் கொலை
காதலனுடன் ஓடிப்போன தமிழ்செல்வி மீண்டும் வீட்டிற்கு திரும்ப வந்த பின்னரும் பூமிநாதனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் மகள் தமிழ்ச்செல்வியை எரித்து கொலை செய்தார்.
5 பேர் உதவி
இதற்கு உடந்தையாக தங்கராஜின் நண்பர்களான புரோட்டா மாஸ்டர்கள் உடைகுளத்தை சேர்ந்த அழகு மகன் பாலமுருகன், பிச்சை மகன் கலைச்செல்வன், சூரசங்கு மகன் பாலமுத்து, செல்வம் மகன் தங்கமணி, வேலு மகன் தங்கபாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
போலீசில் தந்தை சரண்
இந்த கொலை குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மகளை எரித்து கொலை செய்ததாக தங்கராஜ் சிவகங்கை தாலுகா போலீசில் சரண் அடைந்தார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு உடந்தையாக இருந்த பாலமுருகன், கலைச்செல்வன், பாலமுத்து, தங்கமணி, தங்கபாண்டியன் ஆகிய 5 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு கைது செய்தார்.
கைதானவர்கள் வாக்குமூலம்
தங்கராஜ் தனது மகளின் பிரச்சினையை கூறி எங்களிடம் கொலை செய்ய உதவி கேட்டார். அதற்கு நாங்கள் உறவினர் என்ற முறையில் சம்மதித்தோம்.
அதன்படி சம்பவத்தன்று இரவு ஊருக்கு வெளியே உள்ள கொக்குபத்தை காட்டுப்பகுதிக்கு தனது மகளை தங்கராஜ் அழைத்து வந்தார். அப்போது தமிழ்ச்செல்வி பலத்த காயத்துடன் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை ஒரு மரத்தில் கட்டி மரக்கட்டைகளை அடுக்கினோம்.
நகைகளை கழற்றி
இதை பார்த்த தமிழ்செல்வி தனது தந்தையிடம் என்னை விடுங்கப்பா என கெஞ்சினார். ஆனாலும் தங்கராஜின் மனம் கரையவில்லை. என்னை உயிரோடு விடமாட்டீங்க. தம்பி கார்த்திக் ராஜ், தங்கச்சி அபிநயாவை நன்றாக பார்த்துக்குங்க. நான் தீயில் எரியப் போறேன்; என் நகைகளை அவங்ககிட்ட கொடுங்க என்றார்.
கழுத்து இறுக்கி கொலை
கட்டுகளை அவிழ்த்தபின், அவர் அணிந்து இருந்த தோடுகளை கழற்றி கொடுத்தார். மூக்குத்தியை கழற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில், விறகு கட்டையால் அவரை தலையில் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றோம்.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
பின், விறகுகளின் மேல் உடலை வைத்து பெட்ரோலை ஊற்றி எரித்தோம். ஒரு எலும்பு கூட மிஞ்சக்கூடாது என்பதற்காக, விடிய விடிய அங்கேயே இருந்தோம்.
உயிர்போகும் நேரத்தில், தமிழ்ச்செல்வி நகைகளை கழற்றி கொடுத்தது; தம்பி, தங்கையை பற்றி தந்தையிடம் கூறியது, உருக்கமாக இருந்தது. உறவினர் என்ற வகையில் தங்கராஜுக்கு உதவினோம் என்று அவர்கள் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர்.
Share.
Leave A Reply