ஆஸ்திரேலியாவில் இரட்டை தலையுடன் கூடிய அபூர்வ வகை பசு மாட்டை வளர்த்துவரும் ஒருவர் பேஸ்புக் மூலம் அதை ஏலத்தில் விட்டுள்ளார்.
400 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய்) ஏலம் போயிருக்கும் அந்த பசுவின் இரண்டாம் தலையில் கூடுதலாக ஒரு கண்ணும், ஒரு பல்லும், இயங்கும் நிலையில் உள்ள நாசியும் உள்ளதாக அதன் புதிய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மரபணு மாற்ற முறையில் இந்த பசுவினை கலப்பினமாக உருவாக்க யாராவது முயன்றிருக்கக் கூடும். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் இந்த இரட்டை தலை பசு பிறந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.