குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்தார்
.
DSC_0158குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு அனுப்பியிருந்தார்.

ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்
.
DSC_0159இந்நிலையில் கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு அறியக்கிடைத்துள்ளது. எனினும் காரணம் அறியப்படவில்லை.

இந்த பெண்ணின் உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்துக்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது
.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (12) இரவு வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சடலம் உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பெண் நான்கு வயதுடைய குழந்தையையுடைய கைம்பெண் ஆவார்.

DSC_0160DSC_0162DSC_0165DSC_0167DSC_0169DSC_0173DSC_0174

Share.
Leave A Reply