கொடுவாளுடன் கணவர் விரட்டியதால் இளம்பெண்ணும், கள்ளக்காதலனும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவன காவலாளி. ராமசாமியின் மனைவிக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது என்ஜினீயருக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

மனைவி அடிக்கடி செல்போனில் வாலிபருடன் பேசுவதை ராமசாமி கண்டித்தார். எனவே, இதுகுறித்து அந்த பெண் கள்ளக்காதலனான வாலிபரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த வாலிபர் நேற்று முன்தினம் ஆத்தூரில் ராமசாமி வேலைசெய்யும் நிறுவனத்துக்கு வந்து அவரை சந்தித்து பேசினார். அப்போது நான் உன் மனைவியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என்றும், பழக மட்டும்தான் செய்தேன் என்றும் கூறினார்.

நிர்வாணமாக ஓட்டம்

இதையடுத்து ராமசாமி, நாம் இனி நண்பர்களாக இருப்போம் என்று கூறி ஏத்தாப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அந்த வாலிபரை அழைத்து வந்தார். அங்கு ராமசாமியும், அந்த வாலிபரும் மதுகுடித்தனர். ராமசாமியின் மனைவி அவர்களுக்கு சமைத்து போட்டார்.

அப்போது ராமசாமி அந்த வாலிபரையும், மனைவியையும் பழிவாங்க நினைத்தார். பின்னர் இரவில் ராமசாமி, ‘என் மனைவியுடன் உல்லாசமாக இருக்க விரும்பினால் இருந்து கொள்’ என்று அந்த வாலிபரிடம் கூறினார்.

நள்ளிரவில் அந்த வாலிபரும், ராமசாமியின் மனைவியும் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ராமசாமி அந்த வாலிபரை சரமாரியமாக தாக்கி கொடுவாளை எடுத்துக்கொண்டு வெட்ட முயன்றார்.

உடனே அந்த வாலிபர் அவசர, அவசரமாக தான் உடுத்தியிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு தெருவில் நிர்வாணமாக ஓடினார்.

அவரை ராமசாமி விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. பின்னர் ராமசாமி வீட்டுக்கு வந்து மனைவியை தாக்கி கத்தரிக்கோலால் குத்த முயன்றார்.

இதனால் அந்த பெண் உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து நிர்வாணமாக ரோட்டில் ஓடினார். வாலிபரும், பெண்ணும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை

பின்னர் அங்குள்ள பொதுமக்கள் அந்த பெண்ணுக்கு ஒரு நைட்டியை கொடுத்து அணிய செய்தனர். வாலிபர் ஒரு மரத்துக்கு அடியில் சென்று துணிகளை உடுத்திக்கொண்டார். இதையடுத்து அந்த வாலிபரும், பெண்ணும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணைக்கு சென்றபோது அவர்கள் வழக்கு எதுவும் வேண்டாம் என்றும், கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். பின்னர் அந்த வாலிபரும், பெண்ணும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனிடையே ராமசாமி ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கொடுவாளுடன் திரிந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் உதவிகலெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளனர்.

Share.
Leave A Reply