கில்லி படப் பாணியில் தனது காதலியான கர்ப்பமடைந்த மாணவியை ஒரு கிழமையாக தனது அறைக்குள் மறைத்து வைத்திருந்துள்ளான் இளைஞன் ஒருவன்.

யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியரான இளைஞன் தனது காதலியை அவளது பெற்றோரை விட்டு பிரிக்கச் செய்து தனது வீட்டினுள் தனது பெற்றோருக்கே தெரியாது மறைத்து வைத்து சாதனை புரிந்துள்ளான்.

இளைஞனின் காதலி தெல்லிப்பளையைச் சேர்ந்த யுவதி எனவும் யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வருபவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனும் மாணவியும் பெற்றோருக்கு தெரியாது காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரின் காதலும் கண்ணை மறைத்து காமமாகி இருவரும் தவறான நிலைக்கு வந்ததால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த விடயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என மாணவிக்கு அடித்ததாகத் தெரியவருகின்றது.

இதனையடுத்து மாணவி அன்று இரவு பெற்றோருக்கு தெரியாது வீட்டை வி்ட்டு வெளியேறியுள்ளார். இதன் பின்னர் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து தான் தனது காதலனுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந் நேரம் பெற்றோருடன் காதலனான குறித்த இளைஞனும் தொடர்பு கொண்டு கதைத்ததாகவும் தான் தனது காதலியை ஏமாற்றமாட்டேன் எனவும் தெரிவித்துமுள்ளார்.

அத்துடன் தான் இன்னும் சில நாட்களில் பதிவுத்திருமணம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது இருப்பிடம் மற்றும் வேலை தொடர்பாக பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை.

இதே நேரம் மாணவியின் நண்பி ஒருவர் மூலம் குறித்த இளைஞனின் இருப்பிடம் மற்றும் வேலை தொடர்பாக அறிந்த பெற்றோர் தமது உறவுக்காரர்களுடன் இளைஞனின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

இளைஞன் இல்லாத நேரம் வீட்னுள் புகுந்தவர்களால் கலவரம் அடைந்த இளைஞனின் பெற்றோர் குக்குரல் இடவே அயலவர்கள் எல்லோரும் அங்கு திரண்டதால் பெரும் கலவர நிலை உருவாகியது.

தாம் எதற்காக வந்துள்ளோம் என்பதை மாணவியின் உறவினர்கள் தெரிவித்த போது இளைஞனின் பெற்றோர் அதிர்ந்துள்ளனர். இதே வேளை இளைஞனுக்கு தகவல் கொடுத்து அங்கு பாதுகாப்புடன் இளைஞனும் வரவழைக்கப்பட்டார்.

இளைஞனைக் கண்ட மாணவியின் தாயார் மாணவி எங்கே என கதறிய போது இளைஞன் தனது அறைக்குள் சென்று மாணவியை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

மாணவி அறைக்குள் இருந்து வருவதைப் பார்த்த இளைஞனின் பெற்றோரும் அயலவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

மாணவி வீட்டில் தங்கியிருந்ததே தமக்குத் தெரியாது என இளைஞனின் பெற்றோரும் அயலவர்களும் மாணவியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அதிர்ந்துள்ளனர். சுமார் 6 நாட்கள் இளைஞன் குறித்த மாணவியை தனது அறைக்குள் யாருக்கும் தெரியாது வைத்திருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதே வேளை குறித்த வீட்டில் இருந்து மாணவி எவ்வாறு காலைக்கடன்களை முடித்தார், எவ்வாறு குளித்தார் என்பதெல்லாம் பெரும் அதிசயமாக இருப்பதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் தாய், தந்தை ஆகியோர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் எனவும் இளைஞனின் சகோதரங்கள் வெளிநாட்டிலும் வேறு இடங்களிலும் வசிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இருபகுதியினரும் இருவருக்கும் பதிவுத்திருமணம் செய்வதற்கு ஆயத்தப்படுத்திவருவதாகவும் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply