உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
சாதாரண பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த நவீன பறக்கும் கார்களில் இருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் மற்றொரு மாடலும் இதற்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார்போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல் உயரக் கிளம்பி 400 மைல் தூரம் கொண்ட இடத்தை இது விரைவாக சென்றடையும்.
பாரச்சூடின் உதவியுடன் செயற்கை புல்தரையுடன் கூடிய ஓடுபாதையில் இறங்கும் இந்த நவீன பறக்கும் காரை பின்னர் ஷெட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு நிம்மதியாக தூங்கப் போகலாம்.
விற்பனைக்கு வரும்போது இந்த காரின் விலை என்னவாக இருக்கும்? என்பது பற்றிய பலவிதமான யூகங்கள் நிலவிவரும் நிலையில் சராசரி பணக்காரர்களுக்கு இந்த பறக்கும் கார்கள் எட்டாத கனவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.