கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
பளையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றிப் பயணித்த லொறி ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது
விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
லொறி உரிமையாளரும், உதவியாளருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பளை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.