ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் எதிர்பாராத திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டு மல்லாது மாநில மக்கள் அனைவரையும் சோகத் தில் ஆழ்த்தி உள்ளது.
ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு ஒருவரின் எதிர்பாராத இழப்பின் ஆழம் புரியும், அந்த சோகமும் தெரியும்.
ஆனால் அதிகாரி டி.கே.ரவியின் மரணம் ஒரு ஐந்தறிவு ஜீவனையும் பாதித்து இருக்கும் சோகம் அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறது. அது அதிகாரி டி.கே.ரவியின் செல்ல நாய் புருனோவின் சோகம் தான். நாயின் நன்றியுணர்வு பற்றி நாம் எவ்வளவோ கேள்விபட்டு இருக்கிறோம்.
எஜமானருக்காக உயிரைக்கூட அவை கொடுத்து உள் ளன. ஆனால் புருனோவின் சோகம் குடும்பத்தி னரின் சோகத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்து உள்ளது.
பணியில் நேர்மையும், கண்டிப்பும் மிக்கவரான அதிகாரி ரவி பாசத்துக்கும் கட்டுப்பட்டவராக இருந்து இருக்கிறார். அவரது பாசத்துக்கு உரியதாக அவர் வளர்த்த செல்ல நாய் புருனோ இருந்து உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டுதான் இந்த புருனோ செல்லக்குட்டியாக அதிகாரி ரவியின் குடும்பத்தில் இணைந்து உள்ளது.
அதோடு அன்புடன் விளை யாடி மகிழ்ந்த அதிகாரி ரவி அதற்கு கறுப்பு கண் ணாடி அணிவித்தும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். அந்த படத்தை தனது சமூகவலைத்தள பக்கததிலும் வெளியிட்டு இருக்கிறார்.
பணிகளுக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் தன் செல்லக்குட்டியான புருனோவிடமும் பாசத்தை காட்டி வளர்த்து இருக்கிறார் அதிகாரி ரவி. தனது எஜமானர் எப்போது வருவார்? எப் போது செல்வார் என்பதை அறிந்து வைத்திருந்தது புருனோ.
கார் சத்தம் கேட்டவுடன் கேட்டை நோக்கி ஓடிச்சென்று அதிகாரியை புருனோ வரவேற்கும்.
ஆனால் கடந்த 17-ந் திகதியும் அதிகாரி ரவி பெங்களூர் நாகரபாவியில் உள்ள இல்லத்திற்கு வந்தார். ஆனால் அவர் வந்ததோ கண்ணாடி பெட்டியில். அதிகாரி ரவியின் மனைவி குஷ்மா உள் ளிட்ட உறவினர்கள் அழுது புரண்டனர். கண்ணீர் விட்டு கதறினர்.
கண்ணாடி பெட்டியில் வந்த கணவரின் உடலை பார்த்து குஷ்மா கதறியபோது அவரை தேற்றுவதற்கு வார்த்தை இல்லை. இந்த நிலையில் ஓடிவந்த புருனோ தன் எஜமானர் கண்ணாடி பெட்டியில் கண்ணுறங்குவதுபோல் படுத்து இருப்பதை பார்த்து விபரீதம் நடந்து இருப்பதை அறிந்து கொண்டது அந்த ஐந்தறிவு ஜீவன்.
கண்ணாடிப் பெட்டியின் மீது முன்னங்கால்களை தூக்கி வைத்த படி ஈனக்குரல் எழுப்பி கண்ணீர் வடித்தது.
இந்த காட்சியை பார்த்த குஷ்மா உள்ளிட்டோரின் சோகம் இன்னும் பல மடங்கு அதிகரித் தது. இந்த நாயின் பாசம் அதிகாரியின் குடும்பத் தாரை மட்டுமின்றி எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
இந்த நிகழ்வுக்கு பிறகு சரிவர சாப்பிடாமல் இருக்கும் புருனோ, கார் சத்தம் கேட்டால் கேட்டை உற்றுப்பார்ப்பதும் எஜ மானர் வராததால் ஏமாற்றத்தில் தவிப்பதுமாக இருக்கிறது. இந்த நாயின் எஜமானர் விசுவாசம் எல்லோரையும் நெகிழ்ச்சி அடைய செய்வதாக உள்ளது.