உல­கக்­கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. காலி­றுதி போட்­டிகள் அனைத்தும் முடி­வ­டைந்து அரை­யி­றுதிப் போட்­டிகள் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

மார்ச் மாதம் 24ஆம் திகதி முதலாவது அரையிறுதியும், 26ஆம் திகதி இரண்டாவது அரையிறுதியும் நடைபெறவுள்ளன.

முத­லா­வது அரை­யி­று­திப்­போட்­டியில் நியூ­ஸி­லாந்து அணியும், தென்­னா­பி­ரிக்க அணியும் மோத­வுள்­ளன. இரண்டு அணி­களும் சம­ப­லத்­து­டன்தான் இருக்­கி­ன்றன. அதனால் இதில் வெற்றி தோல்­விகள் குறித்த கணிப்பை வெளி­யி­டு­வது கஷ்டமே.

இது­வ­ரையில் இந்த இரண்டு அணி­களும் 61 போட்­டி­களில் மோதி­யுள்­ளன. இந்த 61 போட்­டி­களில் தென்­னா­பி­ரிக்க அணி 36 போட்­டி­களில் தங்கள் ஆதிக்­கத்தை செலுத்தி வெற்­றி­கண்­டுள்­ளது.

நியூ­ஸி­லாந்து அணி 20 போட்­டி­களில் மாத்­தி­ரமே வெற்­றி பெற்றுள்ளது. 5 போட்­டிகள் வெற்றிதோல்வியின்றி முடிந்­துள்­ளது. ஆக, இது­வரை நடந்த தென்­னா­பி­ரிக்க மற்றும் நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டி­களில் தென்­னா­பி­ரிக்­காதான் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றது.

இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் இந்­திய அணியும் அவுஸ்­தி­ரே­லிய அணியும் மோதக் காத்­தி­ருக்­கின்­றன.

நடப்பு உலகக் கிண்­ணத்தில் 7 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள இந்­தியா அனைத்துப் போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்­றது. அதே­நேரம் 7 போட்­டி­க­ளிலும் தான் எதிர்த்­தா­டிய அணி­களின் அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­யது விசேட அம்சமாகும்.

மறு­மு­னையில் அவுஸ்­தி­ரே­லியா முழு பலத்­துடன் காணப்­ப­டு­கின்­றது. காலி­று­தியில் பாகிஸ்­தானை எதிர்த்­தாடி வெற்றி கண்டு அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது அவுஸ்­தி­ரே­லியா.

ஆஸி.யின் பந்­து­வீச்சும் சரி துடுப்­பாட்­டமும் சரி அபா­ர­மா­கத்தான் இருக்­கின்­றது.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அதி­ரடி துடுப்­பாட்ட வீரர்­க­ளான வோர்னர், வொட்சன், மெக்ஸ்வேல் என்று துடுப்­பாட்ட வரிசை சற்று ஸ்­தி­ர­மா­னது. இந்திய அணியை எடுத்துக்கொண்டாலும் துடுப்பாட்ட வரிசையை முழு பலத்துடன்தான் வைத்தி ருக்கிறார்கள். சரி பொறுத்திருந்து பார்ப்போம், இறுதிப்போட்டியில் மோதப் வோர் யார் என்று.

உலகக் கிண்ணம் எமக்குத் தான் : டிவில்லியர்ஸ்

 AB-de-Villiers_0

இம்முறை உலகக் கிண்ணம் எங்களுக்குதான் என்பதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆக்லாந்தில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென்னாபிரிக்க அணிகள் பலப் பரீட்சை நடத்த உள்ளன.

இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே தென்னாபிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. காலிறுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலகக் கிண்ண போட்டியில் நீக்கியுள்ளோம்.

தென்னாபிரிக்க அணி தனது முழுப் பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.

உலகக் கிண்ணத் தொடர்களில் மட்டும் தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு மத்தியிலும் மோதி, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.

உலகக் கிண்ண தொடர்களில் தென்னாபிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாம் புத்துணர்ச்சியுடன் உள்ளோம். நியூசிலாந்துக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.

நியூசிலாந்து பந்து வீச்சாளர் அடம் மில்னே காயத்தால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பிற அணிகளின் நிறை, குறைகளை அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் விருப்பமில்லை.

எங்கள் அணி எப்படி விளையாடுகிறது என்பது மட்டுமே எனக்கு முக்கியம். தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடினால், கண்டிப்பாக வெற்றி எங்களுக்குதான் கிடைக்கும்.
இதேவேளை, காலிறுதியில் அப்படி ஒரு அபார வெற்றி பெற்ற பிறகு, அணியை மாற்றம் செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், சில மாற்றங்கள் அணியில் செய்யப்படலாம் என டிவில்லியர்ஸ் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply