ஹற்றன் நஷனல் வங்கியின் சாவகச்சேரி முகாமையாளர் பரமேஸ்வரன் இப்போது வட மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னிலை கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார்.

இவர் சொந்த இடமான வன்னியில் இருந்து சாவகச்சேரிக்கு உத்தியோகத்துக்கு வந்த ஆரம்பத்தில் சாதாரண பேர் வழியாக இருந்தவர்தான். ஆனால் இன்று ஆசைப்படுகின்றபோதெல்லாம் வீடுகள், தோட்டங்கள், ஆடம்பர வாகனங்கள், கட்டிடங்கள் என்று அசையா சொத்துக்கள் பலவற்றையும் வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்கின்றார்.

பயங்கர மதுப் பிரியரான இவர் நண்பர்களுடன் குடித்துக் கூத்தடிக்கின்றமைக்காக வாடகைக்கு வாகனம் எடுத்து கொண்டாடுகின்றார்.

கிறீன் கிராஸ் ஹோட்டலின் அதிகௌரவத்துக்கு உரிய விருந்தாளியாக அவதாரம் எடுத்து விட்டார். இந்த ஹோட்டலுக்கு சென்று உயர்ந்த சாராயங்களையும், சுவையூட்டிகளையும் ஒரு சதம்கூட கட்டணம் செலுத்தாமல் குடித்து, உண்டு, களிக்கின்றார்.

இவர் கிறீன் கிராஸ் ஹோட்டலின் உரிமையாளரகளில் ஒருவரா? என்று காண்பவர்கள் மூக்கில் விரலை வைக்கின்றனர்.

ஆனால் இவருக்கும் கிறீன் கிராஸ் ஹோட்டலுக்கும் உள்ள தொடர்புகளில் வெளிப்படையாக தெரிவது என்னவென்றால் வங்கி முகாமையாளர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி 50 கோடி ரூபாய் வரை அல்லது அதற்கு மேல் இந்த ஹோட்டலுக்கு கடன் கொடுத்து இருக்கின்றார்.

வெளிப்படையாக தெரியாத பல விடயங்களை சாவகச்சேரி பொது மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

மதுப் பிரியர் போலவே இவர் மாதுப் பிரியரும் ஆவார். பிரியா என்கிற பெயர் கட்டைப் பிரமச்சாரியான இவருக்கு ரொம்பவே பிடித்தமானது. இப்பெயரை உடைய திருமணமான சுமார் 25 வயது யுவதிக்கு சிவப்பு நிற பிளஸர் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து இருக்கின்றார்.

இதே நேரம் வங்கியில் கடன் பெற்ற பெண்களின் வீடுகளுக்கு சென்று பாலியல் இலஞ்சம் கேட்பவர் என்று தெரிகின்றது. 04 பெண்கள் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருக்கின்றனர்.

இவர் பொலிஸாருக்கும் சண்டித்தனம் காட்டி இருக்கின்றார். குடித்து விட்டு வாகனத்தில் கும்மாளம் அடித்துக் கொண்டு இருந்த   இவரையும், நண்பர்களையும் பொலிஸார் பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு போய் இருக்கின்றனர்.

இவரால் முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்ட தளபாடம் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. பொலிஸார் ஏதேனும் இவர் மீது நடவடிக்கை எடுத்தால் தளபாடத்தை திருப்பி எடுத்துக் கொண்டு போய் விடுவார் என்று சொல்லி நடப்புக் காட்டி இருக்கின்றார்.

புதிய கோடீஸ்வரரான இவர் அரசியல்வாதியையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் பணம் வைப்பு செய்கின்றமைக்கு இன்று வங்கிக்கு சென்று உள்ளார்.

இவர் அரசியல்வாதியின் சகோதரனை வங்கிக்குள் அடாத்தாக சிறைப் பிடித்து வைத்திருக்கின்றார். அரசியல்வாதி வங்கியில் கடன் பெற்று இருக்கின்றார் என்றும் அதற்காகவே அரசியல்வாதியின் தம்பியை இவர் பணயக் கைதியாக பிடித்தார் என்றும் இங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரின் அடாவடி நடவடிக்கைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர். அப்போது இதுக்குத்தான் இயக்கம் வேண்டும் என்று சொல்கிறது..

அவர்கள்தான் உங்களுக்கு சரி என்று சொல்லி புலிகளின் பெயரையும் நாச வேலைக்கு பயன்படுத்தி இருக்கின்றார்.

Share.
Leave A Reply