பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான கிரீன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது.

Share.
Leave A Reply