மஹிந்த ராஜபக்0ஷ அர­சாங்­கத்தின் காலத்தில், இந்­தி­யா­வுக்கு நெருக்­கடி கொடுக்­கப்­பட்ட, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் விவ­கா­ரத்­துக்கு இப்­போது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கைப் பய­ணத்தின் போது, திரு­கோ­ண­ம­லையில் உள்ள எண்ணெய்க் குதங்­களை, இந்­தி­யாவின் ஐ.ஓ.சி .(இந்­தியன் ஓயில் நிறு­வனம்) நிறு­வனம் ஊடாக புனரமைப்­ப­தற்கு இரு நாடு­களும் இணைந்து உடன்­பாடு ஒன்றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

13 ஆண்­டு­க­ளுக்கு முன்னர், ரணில் விக்­கிர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்த அர­சாங்­கத்­துடன் செய்து கொள்ளப்­பட்ட உடன்­பாட்­டுக்கு அமைய, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்­களின் மீதான கட்டுப்பாட்டை இந்­தியா தன்­வசம் எடுத்துக் கொண்­டி­ருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் அந்த உடன்­பாடு எந்த நேரத்­தி­லா­வது இடை­நி­றுத்­தப்­ப­டுமா என்ற கேள்வி நீடித்துக் கொண்டேயிருந்தது.

அப்­போது, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்­களை புன­ர­மைத்து பயன்­ப­டுத்­து­வ­தற்கு 35 ஆண்டுகால குத்­தகை உடன்­பாட்டில் ஐ.ஓ.சி. நிறு­வ­னத்­துடன் இலங்கை அர­சாங்கம் கையெழுத்திட்டிருந்­தது.

அதை­ய­டுத்தே, ஐ.ஓ.சி. நிறு­வனம், இலங்­கையில் தனது செயற்­பா­டு­க­ளுக்­காக லங்கா ஐ.ஓ.சி. என்ற துணை நிறு­வ­னத்தை உரு­வாக்கி, இங்கு எரி­பொருள் விற்­பனை மற்றும் விநி­யோ­கத்தில் இறங்­கி­யது.

இதற்­காக, திரு­கோ­ண­ம­லையில் உள்ள 99 எண்ணெய்க் குதங்­களில், 15 எண்ணெய்க் குதங்­களை மட்டும், சீர­மைத்துப் பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

இவை கீழ்­நிலை எண்ணெய்த் தாங்­கி­க­ளாகும்.

ஆனால், தற்­போது செய்து கொள்­ளப்­பட்­டுள்ள உடன்­பாட்­டுக்­க­மைய ஐ.ஓ.சி. நிறு­வனம், மேல்­நிலை எண்ணெய்த் தாங்­கி­களைப் புன­ர­மைக்­க­வுள்­ளது.

இதன் ஊடாக, இலங்­கையில், இந்­தி­யாவின் ஐ.ஓ.சி. நிறு­வனம் மேலும் காலூன்­ற­வுள்­ளது.

இலங்­கையின் எண்ணெய் விநி­யோ­கத்தை இவ்­வாறு முற்­று­மு­ழு­தாக இந்­தி­யாவின் கையில் ஒபடைப்பது ஆபத்­தா­னது என்றும் பயங்­க­ர­மா­னது என்றும், எதிர்க்­கட்­சியில் உள்ள சிலர் குரல் கொடுத்தாலும், தற்­போ­தைய அர­சாங்கம் அதைக் கண்டு கொள்­ள­வில்லை.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள எண்ணெய்க் குதங்­களின் மீது அதற்கு எப்போ­துமே ஒரு கண் இருந்து வந்­துள்­ளது.

காரணம், 1930களில் பிரித்­தா­னிய அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்ட, அந்தப் பிர­மாண்­ட­மான எண்ணெய்க் களஞ்­சியத் தொகுதி, பாது­காப்பு ரீதி­யாக தெற்கா­சியப் பிராந்­தி­யத்தில் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த­தாகும்.

தெற்­கா­சியப் பிராந்­தி­யத்­தி­லேயே, மிகப்­பெ­ரிய எண்ணெய்க் களஞ்­சியத் தொகுதி இது­வே­யாகும்.

பிரித்­தா­னி­யர்­களால், இரண்டாம் உலகப் போருக்கு முன்­ன­தாக, அமைக்­கப்­பட்ட, 101 எண்ணெய்க் குதங்­களில் தற்­போதும் கூட 99 குதங்கள் பாவ­னைக்கு உகந்த நிலை­யில்தான் உள்­ளன.

தலா 12,100 மெட்ரிக் தொன் எரி­பொ­ருளைச் சேமித்து வைக்கத் தக்­க­வ­கையில், இந்த எண்ணெய்க் குதங்கள் ஒவ்­வொன்றும் இருக்­கின்­றன.

பிரித்­தா­னி­யர்­களால் அமைக்­கப்­பட்ட 101 எண்ணெய்க் குதங்­களில் இரண்டு மட்­டுமே சேத­ம­டைந்து விட்­டன.

ஒன்று ஜப்­பா­னிய விமானத் தாக்­கு­த­லிலும், மற்­றது, விமான விபத்து ஒன்­றிலும் சேத­ம­டைந்­தன.

எஞ்­சிய 99 எண்ணெய்க் குதங்­களைக் கைப்­பற்­று­வ­தற்கு அல்­லது அவற்றைக் கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வ­தற்கு, அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற பல நாடுகள் போட்­டி­யிட்டு வந்­தி­ருக்­கின்­றன.

சீனா­வுக்குக் கூட இதனைப் பெறு­வதில் ஆர்வம் இருந்­தது.

இதனால் தான், இந்­தியா எப்­போ­துமே திரு­கோ­ண­ம­லையின் மீது தனது கவ­னத்தைக் குவித்து வந்­தி­ருந்­தது.

2002 ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பாட்­டை­ய­டுத்து, ஐ.ஓ.சி. நிறு­வனம், 15 மில்­லியன் டொலரை செல­விட்டு, 15 கீழ்­நிலை எண்ணெய்த் தாங்­கி­களை மட்டும் புன­ர­மைத்­தி­ருந்­தது.

அவை இப்­போது, அந்த நிறு­வ­னத்­தினால் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த நிலையில், எஞ்­சிய எண்ணெய்க் குதங்­க­ளையும் புன­ர­மைத்துப் பயன்­ப­டுத்தும்   திட்­டத்தை இந்­தியா 2013ஆம் ஆண்டு முன்­வைத்த போது, மஹிந்த ராஜ பக் ஷ அர­சாங்கம் அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்த பின்னர், சீனா­வுடன் நெருக்­க­மா­கிய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம், இந்­தி­யா­வி­ட­மி­ருந்து கொஞ்சம் கொஞ்­ச­மாக விலகிப் போயி­ருந்­தது.

இந்­தி­யா­வுடன் இருந்து வந்த முரண்­பா­டுகள் கார­ண­மா­கவே, திரு­கோ­ண­மலை எண்ணெய் குதங்கள் தொடர்­பான உடன்­பாட்டை விரி­வாக்கிக் கொள்ள மறுத்­த­துடன், ஏற்­க­னவே செய்து கொள்­ளப்­பட்ட 35 ஆண்டு குத்­தகை உடன்­பாட்­டையும் இரத்துச் செய்யப் போவ­தா­கவும் மிரட்டி வந்­தது.

5_143257557ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் முறை­யற்ற வகையில், எண்ணெய் தாங்­கிகள் அமைந்­துள்ள நிலத்­தையும், இந்­தி­யா­வுக்கு குத்­த­கைக்கு கொடுத்­துள்­ள­தா­கவும், அவற்றைக் குத்­த­கைக்கு கொடுக்க அதி­கா­ர­மில்லை என்றும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது.

இந்த இழு­ப­றியால் கடந்த சில ஆண்­டு­க­ளாக, திரு­கோ­ண­மலை எண்­ணெய்க் குதங்­களைப் புன­ர­மைப்­பது பற்­றிய புரிந்­து­ணர்வு உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வில்லை.

திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் விவ­கா­ரத்தில், மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்­கத்தின் கடும்போக்கு இந்­தி­யா­வுக்கு எரிச்­ச­லையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இப்­போது, இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, திருகோ­ண­மலை எண்ணெய்க் குதங்­களைப் புன­ர­மைக்கும் உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது இந்தியா.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், திரு­கோ­ண­ம­லையில் உள்ள 99 எண்ணெய்க் குதங்­க­ளையும் பயன்ப­டுத்தும் அள­வுக்கு, இலங்­கையில் அதற்குச் சந்தை வாய்ப்பு ஏதும் கிடை­யாது.

ஏனென்றால், திரு­கோ­ண­ம­லையில் உள்ள குதங்­களில் சேமிக்கக் கூடிய எண்­ணெயின் அளவு அந்தளவுக்கு பிர­மாண்­ட­மா­னது.

பிரித்­தா­னி­யர்கள் கூட, இந்த எண்ணெய்த் தாங்­கி­களை, இலங்­கையில் விநி­யோ­கிப்­ப­தற்­காக உரு­வாக்­கி­யி­ருக்­க­வில்லை.

போரின் போது, கப்­பல்கள், விமா­னங்­க­ளுக்குத் தேவைப்­படக் கூடிய எரி­பொ­ருளைச் சேமித்து வைப்­ப­தற்­காகத் தான், இதனை உரு­வாக்­கி­யி­ருந்­தனர்.

அது­போ­லவே, இரண்டாம் உலகப் போரில் பிரித்­தா­னிய மற்றும் நேச­நாட்டுப் படை­களின் தேவைக்கு இந்த எண்ணெய்க் குதங்கள் பெரிதும் பயன்­பட்­டன.

அதன் கார­ண­மாகத் தான், இந்த எண்ணெய்க் குதங்­களைக் குறி­வைத்து ஜப்­பா­னிய விமா­னங்கள் தாக்குதல் நடத்­தி­யி­ருந்­தன.

எனினும், ஒரே ஒரு எண்ணெய்க் குதத்தை மட்டும் தான், ஜப்­பா­னி­யர்­களால் அழிக்க முடிந்­தது.

இப்­போது இந்­தி­யாவும் கூட, இந்த எண்ணெய்க் குதங்­களின் கட்­டுப்­பாட்டை, தன்­வசம் எடுத்துக் கொள்வ­தற்கு, எத்­த­னிப்­ப­தற்குக் காரணம், இவை வேறு நாடு­களின் கைக­ளுக்குச் சென்று விடக் கூடாது என்­ப­தற்­காகத் தான். relaxinfo

trincomalee-oil-tanks1987ஆம் ஆண்டு, இலங்­கை­யுடன் இந்­தியா அமைதி உடன்­பாட்டைச் செய்து கொண்டு, தனது படைகளை அனுப்­பி­ய­தற்கு திரு­கோ­ண­மலைத் துறை­மு­கமும் ஒரு காரணம்.

அந்தக் கால­கட்­டத்தில், திரு­கோ­ண­மலைத் துறை­முகம் அமெ­ரிக்­காவின் கைக­ளுக்குச் சென்று விடக் கூடிய வாய்ப்­புகள் இருந்­தன.

அதனால் தான் இந்­தியா அவ­சர அவ­ச­ர­மாக இலங்­கையில் கால் வைத்­தது.

மஹிந்த ராஜ­பக்சஷ அர­சாங்­கத்தின் காலத்தில் கூட, இந்­தி­யா­வுக்கு திரு­கோ­ண­மலை குறித்து நிறையவே கவ­லைகள் இருந்­தன.

சீனக்­குடா விமான தளத்தில், சீன அரசு நிறு­வனம், விமானப் பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை அமைப்­ப­தற்கு இணங்­கி­யி­ருந்­தது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம்.

இந்­தியா அதனை தனது இரா­ஜ­தந்­திர முயற்­சி­களின் மூலமே தடுத்­தது.

எனவே, திரு­கோ­ண­மலை எந்த வகை­யிலும் தனது கையை விட்டுச் சென்று விடக் கூடாது என்­பதில் இந்­தியா உறு­தி­யாக இருக்­கி­றது.

அதனால் தான், மீண்டும், எஞ்­சி­யுள்ள எண்ணெய்க் குதங்­க­ளையும் தனது கட்­டுப்­பாட்டில் கொண்டு வரும் முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

முழு எண்ணெய்க் குதங்­களும் இலங்­கையில் விநி­யோகம் செய்­வ­தற்குத் தேவைப்­ப­டாது போனாலும், அனைத்­தையும் கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வதன் மூலம், பிறரின் தலை­யீ­டு­களைத் தவிர்க்க நினைக்­கி­றது இந்­தியா.

அதைவிட, தெற்காசியப் பிராந்தியத்தின் எண்ணெய் மையமாக திருகோணமலையை மாற்ற விரும்புவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

அது, திருகோணமலை மீது இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது.

எவ்வாறாயினும், தற்போது இந்தியா திருகோணமலை மீதான தனது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

இதுவே இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணத்தின் மூலம் அடையப் பெற்ற மிகப்பெரிய நன்மை என்று, கல்கத்தா ரெலிகிராப் போன்ற ஊடகங்கள் வர்ணித் திருந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், திருகோணமலை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பது, சீனாவுக்கு எதிரான அதன் நகர்வுகளின் முக்கியமான ஒரு கட்டம் என்றே குறிப்பிடலாம்.

ஏனென்றால், பாதுகாப்பு மூலோபாய ரீதியாக, திருகோணமலையின் இடஅமைவு, அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

-சுபத்ரா-

Share.
Leave A Reply