ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை பரிந்துரை செய்துள்ளனர்.
இரத்தினபுரியில் தற்போது நடைபெறுகின்ற ஒரு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
‘விரைவில் வருவேன் விசாரணைக்கு ஒத்துழைப்பேன்’ – பசில்
26-03-2015
தான் விரைவில் நாடு திரும்பி தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள பசில் ராஜபக்ஷவை கொழும்பு ஊடகமொன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மெதமுலன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வழங்க சென்றபோது அங்கு ஒரு வகை பதற்றம் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவின் தேசிய அடையாள அட்டையில் இருக்கு விலாசத்திற்கு நீதிமன்றம் உத்தரவை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடுவல நீதவான் நேற்று வழங்கிய உத்தரவுக்கு அமைய பசில் ராஜபக்ஷவை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவரது கடவுச்சீட்டில் விலாசமாக குறிப்பிடப்பட்டுள்ள மெதமுலன பிரதேச வீட்டுக்கு பொலிஸார் சென்றிருந்த போது வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பொலிஸார் வீட்டு கதவில் ஒட்ட முயற்சித்த போது, அந்த வீடு வேறு ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டதுடன் எதிர்ப்பும் வெளியிடப்பட்டது.
இது குறித்து கடுவல நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.