மும்பை: என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள்.என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள், என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்தவர் சன்னி லியோன். இவரது ஆபாச, செக்ஸ் வீடியோக்கள் இன்னும் ஏக டிமாண்டில் போய்க் கொண்டிருக்கின்றன.
ஆபாசப் படங்களில் நடித்து அவார்டெல்லாம் வாங்கியவர் இந்த சன்னி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
ஜிஸ்ம் 2
திடீரென ஒரு நாள் இந்திப் படங்களில் நடிக்க முடிவு செய்து மும்பைக்கு வந்தார். ஜிஸ்ம் 2 படத்துக்குப் பிறகு இந்தியில் தனக்கென ஒரு இடம்பிடித்துவிட்டார்.
கோடிகளில் சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்யத் தயாராகத்தான் உள்ளனர். தமிழ், தெலுங்கில் கூட நடித்துவிட்டார் சன்னி. இருந்தாலும் அம்மணிக்கு பெரும் வருத்தம் இருக்கிறது.
இழிவாக…
அதுபற்றி அவரே இப்படிக் கூறியுள்ளார்: இந்திப் படங்களில் பிசியாகத்தான் நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாகவே பார்க்கிறார்கள். முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள்.
மனைவிகள் தடை
இந்தி கதாநாயகர்கள் என்னுடன் நடிக்கக் கூடாது என்று அவர்களின் மனைவிகள் தடைவிதிக்கிறார்கள். அவர்களின் கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு.
எனக்கு கணவர் இருக்கிறார்
நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன்கள் எனக்குத் தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார். நான் அந்த மாதிரி ஆளும் அல்ல. என்னவோ அவர்களின் கற்பை நான் அபகரித்துக் கொள்வதைப் போல, சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன.
முழுமையான நடிகை
நான் ஒரு முழுமையான நடிகையாகத் திகழ விரும்புகிறேன். என்னிடம் கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்புத் திறமையும் உள்ளது. பயன்படுத்த வாய்ப்பு கொடுங்கள்,” என்று கூறியுள்ளார் சன்னி லியோன்.
div>