கசிப்பு குடித்து விட்டு போதையுடன் கிணற்றில் தண்ணீர் அள்ள சென்ற இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தவர் கிணற்றில் தவறுண்டு வீழ்ந்து மரணமான சம்பவம் கிளிநொச்சி பாரதிபுரம் வடக்கில் வெள்ளி மாலை இடம்பெற்றது.
மரணமானவர் இராமலிங்கம் நந்தகுமார் (வயது 35) என்பவராவார். மரணமானவர் நித்தம் கசிப்பு அருந்துபவர் எனவும் சம்பவ தினமும் இவ்வாறே கசிப்பினை அருந்தி போதையுடன் கட்டில்லாத கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது தவறுண்டு வீழ்ந்து நீரில் மூழ்கி மரணமானார் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-03-2014

திருட்டில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டபோதும், ஒருவன் தப்பிச் சென்றுள்ளான். நேற்று பிற்கல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
கடை உரிமையாளர் மதிய உணவிற்காக தாவடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது தந்தையான வயோதிபர் கடையில் இருந்துள்ளார்.
அந்தச்சமயத்தில் நான்கு சிறுவர்கள் கடைக்கு வந்து கொப்பி தரும்படி கேட்டுள்ளனர். கொப்பிணை எடுப்பதற்காக அவர் எழுந்து சென்ற சமயத்தில், ஒரு சிறுவன் மறைந்து மறைந்து காசுமேசையடிக்கு சென்று, லாச்சிக்குள் இருந்த 30 ஆயிரம் ரூபா பணத்தை தூக்கி தனது காற்கட்டை பைக்குள் திணித்துள்ளான்.
இதனை அவதானித்த முதியவர், பாய்ந்து சென்று அவனை பிடித்தார். முதியவரின் கைகளை தனது பற்களால் பலமாக கடித்து, அவரது பிடியிருந்து விடுவித்துக் கொண்டு சிறுவன் தப்பியோடிவிட்டான்.
அங்குகூடிய மக்கள் மற்றைய மூன்று சிறுவர்களையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபா பணம் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவர்கள் நால்வரும் 15 வயதிற்கும் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.