கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள்.

ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் நோவா ஸ்கொட்டியாவின் ஹெலிபெக்ஸ் விமான நிலையத்தில் ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 தரையிறங்க முயன்றபோது   அங்கு நிலவிய சீரற்ற வானிலையால் உடனே தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரம் பறந்து கொண்டிருந்தது.

3f16d800-d610-11e4-b8f4-d5890e0cff96_08296805
பின்னர் தரையிறங்கியபோது விமானியால் ஓடுபாதையை தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது.

Halifax-airbus-cra_3249937bஇந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 137 பேர் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
Halifax-canada-air_3249938bஆனால் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டதால் மொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply