நியூஸிலாந்தின் கிண்ண கனவை தகர்த்து சம்பியன் மகுடத்தை சூடியது அவுஸ்திரேலியா.

11ஆவது உலகக் கிண்ணஉகிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது. ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது.

உலகின் மிகப்பெரிய ஆடுகளமான மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறற இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியன.

 6bd359152bde230e720f6a7067005e5f
இப்போட்டியில் அரையிறுதி வரை தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்த நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் பெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதல் ஓவரிலேயே ஸ்டார்க் வீசிய பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் பிரண்டென் மெக்கல்லம். தொடர்ந்து 11.2-வது ஓவரில் மெக்ஸ்வெல் வீசிய பந்தில் போல்ட் ஆகி அதிரடி வீரர் குப்திலும் வெளியேறினார்.

அடுத்து, வில்லியம்சன் ஜோன்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து தடுமாறியது.

1821b6672be1230e720f6a7067006d19அடுத்து களமிறங்கிய டெய்லர் மற்றும் எலியட் இருவரின் ஆட்டத்தால் நியூஸி. 100 ஓட்டங்களை கடந்தது. இந்நிலையில், ஜேம்ஸ் போல்கனர் வீசிய பந்தை அடித்தபோது ஹேடினிடம் பிடி கொடுத்து 40 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார் டெய்லர்.

அடுத்து களமிறங்கிய ஹெண்டர்சன் அதே ஓவரில் போல்ட் ஆனார். பின்வந்த, ரோஞ்ச்-ம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. பின் களத்தில் இருந்த எலியட்டுடன் வெட்டோரி கைகோர்த்தார்.

2015-03-29T105647Z_645395107_GF10000042680_RTRMADP_3_CRICKET-WORLD-FINAL39 ஓவர்களில் 159 ஓட்டங்களை நியூஸிலாந்து எடுத்திருந்தது. பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெட்டோரியும் வெறும் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதையடுத்து, நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எலியட் 83 ஓட்டங்களுடன் ஹெடினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை எடுத்தது.

a0dbaa912be5230e720f6a706700308b184 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது அவுஸ்திரேலியா. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் போல்ட் வீசிய பந்தில் ஆரோன் ஃபிஞ்ச் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே அதிர்ச்சி தோல்வி கண்டார்.

7 பவுண்டரிகளுடன் டேவிட் வோர்னர் 45 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் 2-வது விக்கெட்டாக எலியட் வீசிய பந்தை அடித்து ஹென்றியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு, ஸ்மித் மற்றும் கிளார்க் ஆகியோரின் ஆட்டத்தால் அவுஸ்திரேலியா 100 ஓட்டங்களை கடந்தது.

7b95f2922be6230e720f6a70670037eeகிளார்க் 1 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஹென்றி வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

ஸ்மித் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வொட்சன் 2 ஓட்டங்களை எடுத்தார்.

33.1 ஓவர்களின் முடிவில் 186 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

Share.
Leave A Reply