ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட கட்டிட வரைப்படம்.
அந்நகர மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்டிட வடிவமைப்பு உலக அதிசயமாக திகழ்கிறது. அந்த நகரம் எது என உங்களுக்கு தெரியுமா?
ஒரு புகழ் பெற்ற, தனது அதிகார கொடுங்கோல் ஆட்சியால் உலகையே மிரள வைத்த ஒரு தலைவரை அவமதிப்பு செய்த பெருமைக்குரியது ஈபிள் டவர்.
அந்த தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஈபிள் டவர் போலவே உலகெங்கிலும் எத்தனை மாதிரி கட்டிடங்கள் உள்ளன என்றாவது உங்களுக்கு தெரியுமா?
ஈபிள் டவருக்கு மனைவி இருக்கிறாள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஈபிள் டவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் ஆகிவிட்டது.
இதை போல உங்களை ஈபிள் டவர் பற்றிய வியக்க வைக்கும் எண்ணற்ற ஆச்சரிய தகல்வல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா??? (வேற என்ன சொல்ல போறோம், தொடர்ந்து ஸ்லைடு ஷோ படிங்க…..)

ஈபிள் டவரை இடிக்க திட்டம்
கடந்த 1909 ஈபிள் டவரை இடிக்க திட்டமிடப்பட்டது, பின் இது சிறந்த ரேடியோ ஆண்டெனாவாக (Radio Antena) உபயோகப்படுகிறது என அந்த திட்டத்தை கைவிட்டுனர். (அட லூசு பயலுகளா, இம்புட்டு புத்திசாலியா நீங்க!!)

நிறைய பேர் கண்டுகளித்த நினைவுச் சின்னம்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகிலேயே கட்டணத்தின் பெயரில் அதிக சுற்றுலா பயணிகளால் (6.98 Million) கண்டுகளிக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்ற பெருமையை பெற்றது ஈபிள் டவர்.

ஹிட்லருக்கு அவமதிப்பு
இரண்டாவது உலக போரின் போது ஹிட்லர் ஈபிள் டவரை காண வந்த போது, அதன் லிப்ட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஹிட்லர் ஈபிள் டவரின் உச்சியை காண இயலாது போனது.
இரண்டாவது உலக போரின் போது ஹிட்லர் ஈபிள் டவரை காண வந்த போது, அதன் லிப்ட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஹிட்லர் ஈபிள் டவரின் உச்சியை காண இயலாது போனது.

ஈபிள் டவரின் படிகள்
ஈபிள் டவரில் மொத்தம் 1,665 படிகள் இருக்கின்றன. இதை மொத்தத்தையும் ஏறி போய் ஹிட்லர் பார்க்க முடியாது என்பதனால் தான் கேபிளை துண்டித்துவிட்டனர் போல.
ஈபிள் டவரில் மொத்தம் 1,665 படிகள் இருக்கின்றன. இதை மொத்தத்தையும் ஏறி போய் ஹிட்லர் பார்க்க முடியாது என்பதனால் தான் கேபிளை துண்டித்துவிட்டனர் போல.

மோசடி நபர்
விக்டர் லுஸ்டிக் எனும் மோசடி நபர் ஒரு இரும்பு கடைக்காரருக்கு ஈபிள் டவரை விற்றுள்ளார். (அடேங்கப்பா!!! அட்ராசக்க!!!)

பார்சிலோனாவுக்காக வடிவமைக்கப்பட்டது
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகருக்காக தான் முதன்முதலில் ஈபிள் டவரின் கட்டிட வடிவம் வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த வடிவம் பிடிக்காததால் நிராகரித்துவிட்டனர்.

பாராசூட் வடிவமைப்பாளர் மரணம்
பாராசூட்டை வடிவமைத்தவர் அதை பரிசோதனை செய்து பார்க்க ஈபிள் டவரில் இருந்து குதித்த போது மரணம் அடைந்துவிட்டார்.

ஈபிள் டவரின் திருமணம்
கடந்த 2007 ஆம் ஆண்டு எரிக்கா லா எனும் பெண்மணி ஈபிள் டவரை திருமணம் செய்துக் கொண்டார்.