ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட கட்டிட வரைப்படம்.
அந்நகர மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்டிட வடிவமைப்பு உலக அதிசயமாக திகழ்கிறது. அந்த நகரம் எது என உங்களுக்கு தெரியுமா?

ஒரு புகழ் பெற்ற, தனது அதிகார கொடுங்கோல் ஆட்சியால் உலகையே மிரள வைத்த ஒரு தலைவரை அவமதிப்பு செய்த பெருமைக்குரியது ஈபிள் டவர்.
அந்த தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஈபிள் டவர் போலவே உலகெங்கிலும் எத்தனை மாதிரி கட்டிடங்கள் உள்ளன என்றாவது உங்களுக்கு தெரியுமா?
ஈபிள் டவருக்கு மனைவி இருக்கிறாள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஈபிள் டவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் ஆகிவிட்டது.
இதை போல உங்களை ஈபிள் டவர் பற்றிய வியக்க வைக்கும் எண்ணற்ற ஆச்சரிய தகல்வல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா??? (வேற என்ன சொல்ல போறோம், தொடர்ந்து ஸ்லைடு ஷோ படிங்க…..)31-1427783655-1unknownfactsabouteiffeltower

ஈபிள் டவரை இடிக்க திட்டம்
கடந்த 1909 ஈபிள் டவரை இடிக்க திட்டமிடப்பட்டது, பின் இது சிறந்த ரேடியோ ஆண்டெனாவாக (Radio Antena) உபயோகப்படுகிறது என அந்த திட்டத்தை கைவிட்டுனர். (அட லூசு பயலுகளா, இம்புட்டு புத்திசாலியா நீங்க!!)
31-1427783661-2

நிறைய பேர் கண்டுகளித்த நினைவுச் சின்னம்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகிலேயே கட்டணத்தின் பெயரில் அதிக சுற்றுலா பயணிகளால் (6.98 Million) கண்டுகளிக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்ற பெருமையை பெற்றது ஈபிள் டவர்.
31-1427783667-3unknownfactsabouteiffeltower

ஹிட்லருக்கு அவமதிப்பு
இரண்டாவது உலக போரின் போது ஹிட்லர் ஈபிள் டவரை காண வந்த போது, அதன் லிப்ட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஹிட்லர் ஈபிள் டவரின் உச்சியை காண இயலாது போனது.31-1427783675-4unknownfactsabouteiffeltower

ஈபிள் டவரின் படிகள்
ஈபிள் டவரில் மொத்தம் 1,665 படிகள் இருக்கின்றன. இதை மொத்தத்தையும் ஏறி போய் ஹிட்லர் பார்க்க முடியாது என்பதனால் தான் கேபிளை துண்டித்துவிட்டனர் போல.eefil

மோசடி நபர்
விக்டர் லுஸ்டிக் எனும் மோசடி நபர் ஒரு இரும்பு கடைக்காரருக்கு ஈபிள் டவரை விற்றுள்ளார். (அடேங்கப்பா!!! அட்ராசக்க!!!)
31-1427783690-6unknownfactsabouteiffeltower

பார்சிலோனாவுக்காக வடிவமைக்கப்பட்டது
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகருக்காக தான் முதன்முதலில் ஈபிள் டவரின் கட்டிட வடிவம் வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த வடிவம் பிடிக்காததால் நிராகரித்துவிட்டனர்.
31-1427783697-7unknownfactsabouteiffeltower

பாராசூட் வடிவமைப்பாளர் மரணம்
பாராசூட்டை வடிவமைத்தவர் அதை பரிசோதனை செய்து பார்க்க ஈபிள் டவரில் இருந்து குதித்த போது மரணம் அடைந்துவிட்டார்.
31-1427783703-8unknownfactsabouteiffeltower

ஈபிள் டவரின் திருமணம்
கடந்த 2007 ஆம் ஆண்டு எரிக்கா லா எனும் பெண்மணி ஈபிள் டவரை திருமணம் செய்துக் கொண்டார்.
31-1427783709-9unknownfactsabouteiffeltower

20,000 விளக்குகள்
ஈபிள் டவர் இரவில் ஒளிமயமாக காட்சியளிக்க 20,000 விளக்குகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
31-1427783715-10unknownfactsabouteiffeltower

மாதிரிகள்
உலகெங்கிலும் ஈபிள் டவரை போலவே 30 மாதிரிகள் பல்வேறுப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
31-1427783722-11unknownfactsabouteiffeltower

பத்து யானைகளுக்கு சமம்
ஈபிள் டவரில் உபயோகிக்கப்பட்ட பெயிண்ட்டின் எடை பத்து யானைகளின் எடைக்கு சமமாம்.
31-1427783728-12unknownfactsabouteiffeltower

லண்டன் மாடல்
கடந்த 1891 ஆம் ஆண்டு ஈபிள் டவரை விட மேம்பட்ட கட்டிடத்தை கட்டியது லண்டன். ஆனால், அது சரியான முறையில் கட்டப்படாததால் 1907 ஆண்டு இடிக்கப்பட்டது.
Share.
Leave A Reply