கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு, அம்மன் அயற் கிராமங்களில் 11 நாட்கள் உலாவந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பது வழமையானதொன்றாகும்.

இந்நிலையில் அண்மைய நாட்களாக அம்மன் அயற் கிராமங்களுக்கு உலா சென்ற வேளை அவ்வாலயத்தினுள் ஏழு அடி நீளமான நாகபாம்பு ஒன்று ஆலயத்தினுள் உள் நுழைந்து வலம் வந்து அடியார்களுக்கு தன்னை காண்பித்து விட்டு திடீரென மறைந்துள்ளது.

இதனையடுத்து ஆலயத்தினுள் நின்ற பக்தர்கள் மத்தியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டதுடன் அம்மன் வீதி உலா சென்ற சமயம் பார்த்து உள்நுழைந்த மையானது அதிசயிக்கத்தக்க தொன்றாகும் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இம்முறை முதல்முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய இரதோற்சவம்

அருள்மிகு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

IMG_0385IMG_0187IMG_0191IMG_0196IMG_0205IMG_0354_0IMG_0360_0

Share.
Leave A Reply