ண்டிகர் முழுக்க இப்போது சுமன் ராணி செம ஃபேமஸ். காரணம் – ஹரியானாவில் இருக்கும் ஒரே ஒரு லேடி டிராக்டர் டிரைவர் ராணிதான். ஹிசர் என்னும் தனது ஊரில் உள்ள வயல்நிலங்களை முழுக்க முழுக்க டிராக்டரில் உழுது தள்ளுகிறார் ராணி.

‘‘டிராக்டர் ஓட்டுறதெல்லாம் ரொம்பக் கஷ்டம்’ என்று என்னை மட்டம் தட்டாமல், டிராக்டர் ஓட்டச் சொல்லிக் கொடுத்து, லைசென்ஸ் வாங்கப் போராடியதுவரை எனக்கு உடன் இருந்தவர் என் கணவர்.

இப்போது டிராக்டரில் நிலம் உழுவது நான்தான்! என் கணவர் இப்போது ஓரளவு ரிலாக்ஸாக இருக்கிறார்!’’ என்று சொல்லும் ராணிக்கு, முதலில் லைசென்ஸ் தர யோசித்திருக்கிறார்களாம் ஆர்.டி.ஓ. அதிகாரிகள்.

‘‘இப்படி ஒரு லைசென்ஸ் கேஸை நாங்கள் சந்தித்ததே இல்லை.  இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றே தெரியவில்லை!’’ என்று கை பிசைந்திருக்கிறார்கள். ஒருவழியாக இப்போது ராணி, சட்டத்திற்கு உட்பட்ட, முறையான டிராக்டர் லைசென்ஸ் ஹோல்டர்.

உழுதல் போக மீதமுள்ள நேரங்களில், ஊர்ப் பெண்களை பக்கத்து கிராமங்களில் டிராப் செய்வது, பள்ளிக் குழந்தைகளை பிக்-அப் செய்வது போன்ற நல்ல விஷயங்களுக்கும் டிராக்டரை உறும விடுகிறார் இந்த டிராக்டர் ராணி!

– தமிழ்

Share.
Leave A Reply