மகனின் ஆடிக்கொண்டிருந்த பல்லை பிடுங்குவதற்கு அவனை காரில் கட்டி இழுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தந்தை ஒருவர்.
புளோரிடா மாகணத்தை சேர்ந்தவர் ராபர்ட் அபெர்குரோம்பி, ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர். இவருடைய மகனின் பல் ஒன்று ஆடியபடி இருந்துள்ளது. பல் மருத்துவரிடம் போகாமல் தாங்களாகவே அதை அகற்ற இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி ஆடிக்கொண்டிருந்த பல்லை நூலால் கட்டி அதை காரின் பின்பகுதியுடன் இணைத்தார் ராபர்ட். பின் வேகமாக காரை முன்நோக்கி செலுத்தியவுடன், அந்த சிறுவன் பல் பிடிங்கிக்கொண்டு வந்து விட்டது. இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார் ராபர்ட்.
அந்த வீடியோவை பலரும் விரும்பி பார்த்துவருவது ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய ஒரே பயம் அவன் சாலையில் விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டுவிடும் என்பதுதான் என்று சாதரணமாக கூறியுள்ளார் அந்த பாசக்கார தந்தை.