இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரு வருடகாலமாக தனது மாமியாருக்கு தேநீரில் சிறுநீரை கலந்து கொடுத்து வந்ததாக இந்தூர் மாவட்ட நீதிமன்றில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
30 வயதான இப்பெண் தனது கணவரின் தாயார் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தார். அண்மையில் இப்பெண்ணின் தேநீர் கோப்பைக்குள் சிறுநீர் கழித்துக்கொண்டிருப்பதை அவரின் மாமியார் நேரடியாகக் கண்டுவிட்டாராம்.
இது தொடர்பாக விசாரித்தபோது, தான் ஒருவருடகாலமாக மாமியாருக்கு சிறுநீர் கலந்த தேநீரை வழங்கி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பெண் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தவர். ஆனால், திருமணமாகி சில மாதங்களிலேயே இப்பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
தனது கணவருடன் வாழப்பிடிக்காமல் கணவரின் வீட்டிலிருந்து வெளியேற அப்பெண் தீர்மானித்தார்.
தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வருமாறு அவரின் கணவர் அழைத்தபோது, பல நிபந்தனைகளை விதித்தார் இப்பெண்.
கணவரே சமைக்க வேண்டும், ஆடைகளை கழுவ வேண்டும், தனக்கு தினமும் பாதத்தில் ஃபூட் மசாஜ் செய்துவிட வேண்டும் ஆகியனவும் இந்நிபந்தனைகளில் அடங்கும்.
இந்நிபந்தனைகளுக்கு கணவர் சம்மதித்தார். இத்தம்பதிக்கு 4 வயதான ஒரு மகளும் உண்டு.
ஆனால், இப்பெண்ணின் நடவடிக்கைகளை மாமியார் விரும்ப வில்லை. இதனால், மாமியாருக்கு சிறுநீர் கலந்த தேநீரை தினமும் கொடுத்துவந்தாராம் இப்பெண்.
இப்பெண்ணை அடுத்த மாதம் 2 ஆம் திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு இந்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.