
இந் நிலையில் இச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.சிறுமியின் மரணம் தொடர்பாக வைத்திய அறிக்கையிலும் குழப்பமான நிலை காணப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடிருந்தது.
இதனையடுத்து உறவினர்களிடம் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர் கனகராயன்குளம் பொலிஸாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்புடைய செய்தி
கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம்: அதிர்ச்சி தகவல்!!