அமெ­ரிக்க பொப்­பிசை நட்­சத்­தி­ர­மான மைக்கல் ஜக்ஸன், தனது பாலியல் துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கைகளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மௌனித்­தி­ருக்கச் செய்­வ­தற்­காக 200 மில்­லியன் டொலர்­களை (சுமார் 258 கோடி ரூபா) செல­விட்­டி­ருந்தார் என சட்­டத்­த­ர­ணிகள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

960929பொப்­பிசை சக்­க­ர­வர்த்தி என வர்­ணிக்­கப்­பட்ட மைக்கல் ஜக்ஸன், 2009 ஜுன் 25 ஆம் திகதி தனது 50 ஆவது வயதில், அள­வுக்கு அதி­க­மான செறி­வு­கொண்ட மருந்­தேற்­றப்­பட்­டதால் உயி­ரிழந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அவர் மறைந்து சுமார் 6 வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் அவர் மீதான குற்­றச்­சாட்­டு­களும் அவ­ருக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களும் இன்னும் ஓய­வில்லை.

தாம் சிறு­வர்­க­ளாக இருந்­த­ காலத்தில், மைக்கல் ஜக்­ஸ­னுடன் இணைந்து செயற்­பட்ட வாட் ரொப்ஸன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர், மைக்கல் ஜக்ஸன் தம்மை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

இதனால், தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மைக்கல் ஜக்­ஸ­னுக்கு சொந்­த­மா­க­வி­ருந்த 150 கோடி டொலர் பெறு­ம­தி­யான ஜக்ஸன் எஸ்­டேட்டின் நிர்­வா­கி­க­ளிடம் மேற்­படி இரு­வரும் கோரு­கின்­றனர்.

960926இந்­நி­லையில், பாலியல் குற்­றச்­சாட்­டுகள் வெளி­வ­ராமல் தடுப்­ப­தற்­காக 200 மில்­லியன் டொலர்­களை மைக்கல் ஜக்ஸன் செலவிட்டிருந்தார் என வாட் ரொப்ஸன் மற்றும் மேஸ் சேவ்சக் ஆகி­யோரின் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தான் 9 வயது சிறு­வ­னாக இருந்­த­போது மைக்கல் ஜக்ஸன் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் தனது தந்­தைக்கு 10 லட்சம் டொலர்­களை ஜக்ஸன் வழங்­கி­ய­தா­கவும் ஜேம்ஸ் சேவ்சக் (36) தெரி­வித்­துள்ளார்.

இவர் மைக்கல் ஜக்­ஸ­னுடன் விளம்­ப­ர­மொன்றில் இணைந்து தோன்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

1987 ஆம் ஆண்டு 8 வயது சிறு­வ­னாக தான் இருந்­த­போது முதன்­முதலில் மைக்கல் ஜக்­ஸனை சந்­தித்­த­தாக ஜேம்ஸ் சேவ்சக் கூறு­கிறார்.

அதே­வேளை தான் 9 வயது சிறு­வ­னாக இருந்­த­போது தன்னை மண­ம­க­ளாக சித்­த­ரித்து போலி திரு­மண வைப­வ­மொன்­றையும் மைக்கல் ஜகஸன் நடத்­தினார் என நீதி­மன்­றிடம் சேவ்சக் தெரி­வித்­துள்ளார்.

ஜேம்ஸ் சேவ்­சக்கை 100 தட­வை­க­ளுக்கு மேல் மைக்கல் ஜக்ஸன் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக சேவ்சக்கின் சட்­டத்­த­ரணி தெரி­வித்­துள்ளார்.

960928ஜக்ஸன் மீது பாலியல் குற்­றச்­சாட்டு சுமத்தும் மற்­றொ­ரு­வ­ரான வாட் ரொப்ஸன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நடனக் கலை­ஞ­ராவார்.

தற்போது 32 வய­தான வாட் ரொப்ஸன், பிர­பல இசைத்­துறை நட்­சத்­தி­ரங்­களான பிரிட்னி ஸ்பியர்ஸ், பாடகர் ஜஸ்டின் டிம்­பர்லக் ஆகி­யோ­ரு­டனும் இணைந்து பணி­யாற்­றி­யவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவர் சிறு­வ­யதில் ஜக்ஸன் மீதான பாலியல் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்து வாக்­கு ­மூலம் அளித்­தி­ருந்தார்.

ஆனால், சுமார் ஒரு வரு­ட­கா­லமாக ஜக்ஸன் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக பின்னர் குற்றம் சுமத்­தினார்.

’22 வருட கால­மாக நான் இதை நிரா­க­ரித்து மௌன­மாக வாழ்ந்தேன்’ என ரொப்ஸன் கூறினார்.

மைக்கல் ஜக்ஸன் தன் மீதான பாலியல் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்து வந்தார்.

எனினும், அவரால் பாதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்ட ஜோர்டான் சான்ட்லர் எனும் சிறுவனின் குடும்பத்திற்கு 4 கோடி டொலர்களை வழங்கியிருந்தார்.

960931maicaljactionஇந்நிலையில் மைக்கல் ஜக்ஸனின் ஜக்ஸன் எஸ்டேட் நிர்வாகத்திடம் வாட் ரொப்ஸன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகியேர் நஷ்ட ஈடு கோர முடியுமா என்பது குறித்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply