ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக துருக்கி நாட்டிற்கு செல்ல இருந்த சுவிட்சர்லாந்து குடிமகன் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் சூரிச் விமான நிலையத்திலிருந்து துருக்கி நாட்டிற்கு பயணிப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, சூரிச் விமான நிலையத்திற்கு வந்த பொலிஸ் அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஏற்கனவே துருக்கி நாட்டில் இருந்துவிட்டு தற்போது சுவிட்சர்லாந்து நாட்டிற்கு திரும்பிவிட்டு, மீண்டும் இஸ்தான்பூல் செல்ல இருந்ததாக தெரியவந்தது.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் துருக்கி வழியாக சிரியா அல்லது ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பில் ஜிகாதியாக இணைய திட்டமிட்டிருந்ததாக பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல், அவர் சுவிட்சர்லாந்து அரசால் தடை செய்யப்பட்டுருந்த இயக்கத்தை சேர்தவர் என்றும் அதற்கு பல வகைகளில் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவிஸ் உளவு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 2001 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 55 நபர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைய சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே ஐ.எஸ் அமைப்பில் இணைய சென்ற ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply