முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரை நாடு கடத்துவதற்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று தடைவிதித்துள்ளது.

பலவந்தமாக அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் குறித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் வரி அறவிடும் பணியை மேற்கொண்டுவந்தாக கூறப்படும் புவநேசன் துரைராஜா எனும் இவர், முன்னதாக பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்தார்.

எனினும் அவரது புகழிடக் கோரிக்கையை அந்த நாடு நிராகரித்தமையை அடுத்து, போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைந்தார் எனவும் தெரியவருகின்றது.

இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் இவரை நாடுகடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எனினும் புவநேசன் குற்றத்தை செய்ய பயன்படுத்தப்பட்டவரே தவிர குற்றமுள்ளவர் அல்ல என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply