முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் முன்னிலையாக போட்டியிட எந்தவித தடையும்  இல்லை என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது, 19வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பங்காளி கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இதில் கலந்து கொள்ளவில்லை என்பது நோக்கத்தக்கது.

கலந்துரையாடலின் போது, நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் ஒரு மே தின கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துலையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை, புத்தாண்டின் பின்னர் எட்டுவதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

Share.
Leave A Reply