பொலநறுவையில தந்தையை மகன் கொன்ற சம்பவம் இடம்பெற்று சில மணிநேரத்தில் மட்டக்களப்பில் தந்தையை சரமாரியாகத் தாக்கி கொலை செய்த 24 வயது மகன் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 6 பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய ஞானமுத்து விஜயன் என்பவரை அவரது மகன் கடுமையாக பொல்லு மற்றும் கால்களாலும் தாக்கியுள்ளார்.

இதனால் கடுமையாக காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமானார்.

11168467_809960715753611_1579132774172932344_nசம்பவத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய மகானான விஜயன் கிருபைநாதன் மது போதையுடன் இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற இரவுத் தபால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

இவரது உடல் பல துண்டுகளாக சிதறியுள்ளது.

இருவரது சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

11140258_809960779086938_2041884628729059280_n11159545_809960755753607_7353188028254503415_n11150288_809960762420273_2681970855349771898_n1513708_809960995753583_5002122055749252537_n22484_809961062420243_844148924389186942_n11109824_809961009086915_4162782296770528236_n

தந்தையை கொன்றுவிட்டு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த மகன்!

4321-attack-on-jayasinha87643712411154199_10204153439376918_2091999391_o

Share.
Leave A Reply